’தல’ என்கிற ஒரு சகாப்தம் உருவான நாள் இன்று.. தீனா ரிலீசாகி 19 வருஷம் ஆகுது.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

சென்னை: அல்டிமேட் ஸ்டார் அஜித் 'தல'யாக மாறிய நாள் இன்று. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தீனா படம் வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகள் ஆகிறது.

ட்விட்டரில் #19YearsOfDHEENA என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தீனா படத்தில் தான் அஜித்குமாருக்கு 'தல' என்ற அடைமொழியை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கொடுத்தார். அந்த அடைமொழியே அஜித்தின் அடையாள மொழியாக அஜித் ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வருகிறது

தீனா ரிலீஸ்

தீனா ரிலீஸ்

2001ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி அஜித், லைலா நடிப்பில் வெளியான தீனா படம் அஜித்துக்கு மாஸ் நடிகர் என்ற அந்தஸ்த்தை பெற்றுத் தந்தது. அந்த படத்திற்கு பிறகு தான் ‘தல' ரூட்டே வேற லெவலுக்கு அதிரடியாக மாறியது.

மறுபடியும் தீனா கூட்டணி

மறுபடியும் தீனா கூட்டணி

தீனா படத்திற்கு பிறகு 19 ஆண்டுகளாக 'தல' அஜித் கால்ஷீட்டுக்காக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் காத்துக்கிடக்கிறார். பேட்டிகளில், தல அஜித்துடன் எப்போது படம் பண்ணுவீர்கள் என்று யார் கேட்டாலும், அஜித் சார் எப்போ ஓகே சொன்னாலும், நான் ரெடி என புன்னகையுடன் முருகதாஸ் சொல்லி வருகிறார். மறுபடியும் அந்த தீனா கூட்டணி அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஹிட் பாடல்கள்

யுவன் சங்கர் ராஜா இசையில் தீனா படத்தில் வெளியான பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட். ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா' மாஸ் ஹிட் என்றால், ‘சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்' ரொமான்டிக் ஹிட்.

ஃபேன் பேஸ்

ஃபேன் பேஸ்

'தல' என்ற அடைமொழியுடன் அல்டிமேட் ஸ்டார் அஜித் அதிரடி காட்டி நடிக்கத் தொடங்கியதும், இந்த படத்தில் இருந்து அஜித்துக்கான ஃபேன் பேஸ் அதிகளவில் கூடியது. அன்று கூடிய ஃபேன் பேஸ் இன்றளவும் கொஞ்சம் கூட குறையாமல் தமிழ்நாட்டில் கெத்து காட்டி வருகிறது. அஜித்தின் படங்கள் தோல்வியை சந்தித்தாலும், நிச்சயம் அடுத்த வெற்றியை கொடுப்பார் என ரசிகர்கள் அவர்மீது வைத்திருக்கும் நம்பிக்கை அவரும் விடாமல் காப்பாற்றி வருகிறார்.

’தல’ சகாப்தம்

'தல' என்கிற ஒரு சகாப்தம் உருவான நாள் இன்று என #19YearsOfDHEENA ஹாஷ்டேக்கை உருவாக்கி தல ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

யங் டான்

பில்லா படத்திற்கு முன்பே தீனா படத்தில் யங் டானாக நடித்து அஜித் கலக்கியிருப்பார். இந்த ஒரு மாஸான காட்சியே அதற்கு சான்று என அஜித் ரசிகர்கள் தீனா படத்தின் காட்சிகளை ஷேர் செய்து வருகின்றனர்.

’தல’ பொங்கல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘தல' அஜித்தின் பல திரைப்படங்கள் இன்றைய தினம் வெளியாகி உள்ளன. ரெட் படம் ரிலீசாகி இன்றோடு 18 ஆண்டுகள் ஆகின்றன. நேசம் படம் வெளியாகி இன்றுடன் 23 ஆண்டுகள் ஆகின்றன. தொடரும் படம் 21ம் ஆண்டை தாண்டியுள்ளது. பரமசிவன் 14 வருடங்களை கடந்துள்ளது என இந்த தல ரசிகர்கள் பக்கா விவரங்களுடன் ட்வீட் போட்டுள்ளார்.

க்யூட் லைலா

லவ்வர் பாயாகவும், எதிரிகளை பந்தாடும் மாஸ் டானாகவும் தீனா படத்தில் அஜித் நடித்திருப்பார். க்யூட் லைலாவுடன் அவர் செய்யும் காதல் காட்சிகள் எல்லாம் இன்று அந்த படத்தை டிவியில் பார்த்தாலும், பார்த்துக் கொண்டே இருக்கத் தூண்டும் என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

ஜெயம் ரவியின் ஃபேவரைட்

நடிகர் ஜெயம் ரவியின் ஆல்டைம் ஃபேவரைட் பாடல் என்றால் அது தீனா படத்தில் வரும் ‘சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்' பாடல் தான் என ஜெயம் ரவி ஒரு பேட்டியில் சொன்னதை இந்த ரசிகர் இங்கே குறிப்பிட்டுள்ளார்.

பஞ்ச் டயலாக்

எங்களுக்கு எதிரா சாட்சி சொல்றதே தப்பு, பொய் சாட்சியா சொல்ற, இன்னொரு வாட்டி கோர்ட் பக்கம் உன்ன பார்த்தேன், உன் உடம்புல கை இருக்கும், கால் இருக்கும், மூக்கு இருக்கும்,முழி இருக்கும், ஆனா உயிர் இருக்காது என தீனா படத்தில் தல அஜித் சொல்லும் பஞ்ச் வசனத்தையும் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X