தமிழ்நாட்டுக்கு லாஸ்லியா வந்து ஒரு வருஷம் ஆகிடுச்சு.. டிரெண்ட் செய்யும் ஆர்மி #1yearoflosliyaism
சென்னை: இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, பிக்பாஸ் சீசன் 3ல் அறிமுகமாகி, இன்றுடன் ஒரு வருடம் ஆவதை ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video
ஓவியாவை போலவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான லாஸ்லியாவுக்கு தனியாக ஆர்மி உருவாகி இருக்கிறது.
நேற்று பிக்பாஸ் கவினின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில், தற்போது #1yearoflosliyaism டிரெண்டாகி வருகிறது.

அது மட்டும் இல்லைன்னா
கொரோனா மட்டும் இல்லைன்னா, இந்நேரம் அடுத்த லாஸ்லியா யாரு? ஓவியா யாரு? என அடுத்த சீசன் போட்டியாளர்களை வைத்து மக்கள் கம்பேர் பண்ணி இருப்பார்கள். சில மீரா மிதுன்களும், வனிதா விஜயகுமார்களும், கூட வந்திருப்பார்கள். ஆனால், தற்போதைக்கு, மற்ற சீரியல்களை போலவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் இடைக்கால தடை விதித்திருக்கிறது அந்த வைரஸ்.

ஒரு வருஷம் ஆகிடுச்சு
பிக்பாஸ் பிரபலமாக அறிமுகமான லாஸ்லியா தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் குடிபுகுந்து இன்றுடன் ஒரு வருஷம் ஆகிடுச்சு, அதனை அவரது ஆர்மியினர் #1yearoflosliyaism என்ற ஹாஷ்டேக்கை பதிவிட்டு தெறிக்கவிட்டு கொண்டாடி வருகின்றனர். நேற்று கவினின் பிறந்தநாளை லாஸ்லியாவின் ரசிகர்களும் டிரெண்ட் செய்தனர்.

பிக்பாஸ் டு சினிமா
பிக்பாஸ் பிரபலமாக வந்து தற்போது இரு படங்களில் ஹீரோயினாக நடித்து நாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் லாஸ்லியா. ஹர்பஜன் சிங் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். பிரெண்ட்ஷிப் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அழகு தேவதை
கேரளம், ஆந்திரம், வட இந்தியா என எத்தனையோ நடிகைகள் தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி ஆகி உள்ளனர். அதுபோல, இலங்கையில் இருந்து இறக்குமதியான இந்த அழகு தேவதை கோலிவுட்டில் தனது என்ட்ரியையும், பல சாதனைகளையும் செய்ய உரிய நேரம் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்.

பெருமையா இருக்கு
லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமையாக இருக்கிறது என இவரை போல பல நெட்டிசன்களும் டிவிட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில், உண்மையாகவும், அழகு பொங்கவும் வலம் வந்த நடிகை லாஸ்லியாவுக்கு அப்போது உருவான ரசிகர்கள், இப்போ எக்கச்சக்கமாக அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது படம்
ஹர்பஜன் சிங், அர்ஜுன் உடன் பிரெண்ட்ஷிப் படத்தில் நடித்துள்ள நடிகை லாஸ்லியா, நடிகர் ஆரி மற்றும் சிருஷ்டி டாங்கே உடன் இணைந்து இன்னொரு படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார். லாக்டவுன் முடிந்தவுடன் இரு படங்களின் இறுதிக்கட்ட படபிடிப்பும் முடிந்து, ரசிகர்களுக்காக தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications