தளபதி விஜய் ’மாஸ்டர் செல்ஃபி’ எடுத்து ஒரு வருஷமாகிடுச்சு.. டிரெண்டாகும் #1YearOfMasterSelfie

சென்னை: கடந்த ஆண்டு நெய்வேலியில் மாஸ்டர் ஷூட்டிங்கின் இறுதிகட்ட படப்பிடிப்பின் போது தளபதி விஜய் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட மாஸ்டர் செல்ஃபி எடுத்து ஒரு வருடம் ஆகிறது.

கொரோனா தாக்கம் இந்தியாவில் கடந்த ஆண்டு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாத நிலையில், நடிகர் விஜய் இந்த செல்ஃபியை எடுத்திருந்தார்.

அதனை கொண்டாடும் வகையில் #1YearOfMasterSelfie ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

விஜய் வீட்டில் ரெய்டு

விஜய் வீட்டில் ரெய்டு

மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும் போதே நடிகர் விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை காரணமாக அழைத்துச் சென்ற சம்பவம் கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை கிளப்பியது. அதன் பின்னர் மீண்டும் ஷூட்டிங் சென்ற நடிகர் விஜய், நெய்வேலியில் ஷூட்டிங்கை முடித்த கையோடு ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

மாஸ்டர் செல்ஃபி

மாஸ்டர் செல்ஃபி

கடந்த ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் அந்த செல்ஃபியை பதிவிட்டு ட்விட்டரை திணறடித்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி மாலை தான் நெய்வேலியில் ஷூட்டிங்கை பேக் அப் செய்து விட்டு ரசிகர்களுடன் ஒரு வேன் மீது ஏறி நின்று நடிகர் விஜய் அந்த மாஸ் செல்ஃபியை எடுத்தார்.

மறக்கமுடியாத நாள்

இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும், தளபதி ரசிகர்களால் இந்த நாளை என்றுமே மறக்க முடியாது. மாஸ்டர் செல்ஃபியை வேன் மீது ஏறி நின்று ரசிகர்கள் அலை மோத அவர்களுக்கு கை அசைத்து விட்டு, க்யூட் சிரிப்புடன் விஜய் அந்த செல்ஃபியை எடுத்து தனது ரசிக பலத்தை உலகிற்கு நிரூபித்த நாள்.

ஒரு வருஷம் ஆகிடுச்சு

நெய்வேலியில் கடந்த ஆண்டு நடிகர் விஜய் எடுத்த மாஸ் மாஸ்டர் செஃல்பி எடுத்து ஒரு வருஷம் ஆகிடுச்சு என #1YearOfMasterSelfie ஹாஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்ட் செய்து தளபதி ரசிகர்கள் தெறிக்க விட்டு கொண்டாடி வருகின்றனர். மாஸ்டர் படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

காருக்கு முத்தம்

காருக்கு முத்தம்

கடந்த ஆண்டை போலவே, சமீபத்தில் நடிகர் விஜய் தனது பனையூரில் உள்ள இல்லத்திற்கு வருகை தந்த போது, ரசிகர்கள் திரளாக கூடி நின்று அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். கார் கண்ணாடியில் விஜய் கை வைத்த இடத்திலேயே ரசிகர் ஒருவர் கொடுத்த முத்தமும் வேற லெவலில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

மெக்கானிக்கா

மெக்கானிக்கா

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய்யின் 65வது படத்தை இயக்கவுள்ளார். வரும் ஏப்ரலில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. தளபதி 65 படத்தில் நடிகர் விஜய் மெக்கானிக்காக நடிக்க உள்ளார் என்ற தகவலும் பரவி வருகிறது. ஆனால், துப்பாக்கிகள் டைட்டிலில் சூழ்ந்து இருப்பதால், பார்ட் டைம் மெக்கானிக், ஃபுல் டைம் ரகசிய ஏஜென்ட்டாக இருப்பாரா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X