Don't Miss!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Sports ஹர்திக் vs ரோகித் - எங்க அணியில் விரிசல் இல்லை.. வீடியோ வெளியிட்டு சிக்கி கொண்ட மும்பை இந்தியன்ஸ்
- Lifestyle இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- News முருகனை அடுத்து மாரியம்மன் வழிபாட்டில் வள்ளிக் கும்மி… காரணம் என்ன?
- Education 5-ம் வகுப்பு வரையிலான வினாத்தாள் நடைமுறை மாற்றம்.!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
சுசிலீக்ஸ்... ஒரு வருஷ நிறைவை இப்படி கொண்டாடறாங்களாம்... கலக்கத்தில் நடிகைகள்! #1YearOfSuchiLeaks
Recommended Video
சுசிலீக்ஸ்... சமூக வலைத் தளங்களில் உலா வருபவர்கள் அத்தனை சுலபத்தில் மறக்க முடியாத ஹேஷ்டேக்.
கடந்த ஆண்டு ஜனவரி 21-ம் தேதி இந்த ஹேஷ்டேக் போட்டு, பின்னணி பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான வீடியோக்கள், ஆபாச படங்கள் திரையுலகையே அதிர வைத்தன. பல நடிகைகள் வயிற்றில் புளி கரைத்தன.
"பாடகி சுசித்ரா மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். சிலர் இதை பயன்படுத்தி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஆபாச படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு விட்டார்கள்," என்று கூறப்பட்டது. இது தொடர்பாக சுசித்ராவும், அவருடைய கணவர் கார்த்திக்கும் போலீசில் புகார் செய்தனர். வருத்தமும் தெரிவித்தனர்.
அதற்குப் பிறகு கடந்த சில மாதங்களாக 'சுசிலீக்ஸ்' அமைதியாகத்தான் இருந்தது. தமிழ் பட உலகினர் நிம்மதி அடைந்தனர்.
#1yearofSuchileaks
இந்தநிலையில் நேற்று பாடகி சுசித்ரா பெயரில் உள்ள ஒரு ட்விட்டர் பக்கத்தில் ‘ஓராண்டு நிறைவு' என்ற குறிப்புடன் நடிகைகள் பெயரில் அடுத்தடுத்து வீடியோக்கள் வெளியாகின.
கபாலி வசனத்துடன்
‘கபாலி' படத்தில் ரஜினி பேசும் ‘வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு சொல்லு. எப்படி போனேனோ அப்படியே திரும்ப வந்துடேன்னு சொல்லு' என்ற ‘பஞ்ச்' வசனம் ஒலிக்க பெண்களின் குளியல் காட்சிகள் வெளியாகின.
யார் வீடியோ வேணும்
தொடர்ந்து பிரபல நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டு, ‘எந்த நடிகையின் வீடியோ வேண்டும்' என்ற கருத்துக் கணிப்பும் நடத்தப்பட்டது. இதனால் நடிகைகளிடையே மிகுந்த கலக்கம் ஏற்பட்டுள்ளது.
எத்தனை...?
சுசிலீக்ஸ் என்ற பெயரில் ஒரு பக்கம் மட்டுமல்ல... ஏராளமான பக்கங்கள் உள்ளன ட்விட்டரில். பெரும்பாலான பக்கங்களில் இளம் பெண்கள், நடிகைகளின் ஆபாச வீடியோக்கள்தான் நிரம்பியுள்ளன.
இந்தப் பக்கத்தை இப்போதும் சுசித்ராதான் இயக்குகிறாரா... அல்லது அவர் பெயரில் வேறு யாரேனும் இயக்கி விளையாடுகிறார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.