குப்பை படம்.. வேற லெவல்.. இப்படித்தான் சூப்பர் டீலக்ஸுக்கு விமர்சனம் வந்தது #1yearofSuperDeluxe

சென்னை: ஜிகர்தண்டா படத்தில் வரும் ஓபனிங் காட்சியில், குப்பை படம் என்றும்.. சூப்பர் படம் என்றும் வசனங்கள் எழும், அது போலத்தான் கடந்த ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்துக்கு விமர்சனங்கள் எழுந்தன.

Recommended Video

Super Deluxe Best Film Award | Kerala critics choice award | Thiagarajan Kumararaja

தேசிய விருது வென்ற ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமார ராஜா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் இன்றுடன் ஓராண்டை கடந்துள்ளது.

இதனை தமிழ் சினிமா ரசிகர்கள் #1yearofSuperDeluxe என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

குப்பை படம்

குப்பை படம்

இதெல்லாம் ஒரு படமா? தமிழ் கலாசாரத்தையே சீரழிக்கும் விதமாக உருவாகி இருக்கிறதே, படம் ரொம்ப போருங்க, தியேட்டர்ல படுத்துத் தூங்கிட்டேன். கடைசி வரைக்கும் டைரக்டர் என்னய்யா சொல்ல நினைக்குறாருன்னே தெரியலையே? கன்றாவி பார்க்க சகிக்கலை என மிக மோசமான விமர்சனங்களை சூப்பர் டீலக்ஸ் பெற்றது.

வேற லெவல்

வேற லெவல்

அதே நேரத்தில், உலகத் தரமான சினிமா விரும்பிகளால், இந்த படம் வேற லெவலில் இருப்பதாக போற்றப்பட்டது. விஜய்சேதுபதி, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், சமந்தா, ஃபகத் ஃபாசில், மாஸ்டர் அஸ்வந்த் என பலரது நடிப்புகளையும் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இயக்குநர் தியாகராஜன் குமார ராஜவுக்கு பல விருதுகளும் கிடைத்தன.

ஓட வில்லை

ஓட வில்லை

புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் படங்களை போல தமிழ் சினிமாவில் சாபம் பெற்ற சில படங்கள் அவ்வப்போது ரிலீசாகும். அந்த படம் ரிலீசாகும் போது, யாருமே தியேட்டருக்கு சென்று அதனை பார்க்காமல், படத்தை படுதோல்வி அடைய செய்வார்கள். ஆனால், அதே படத்தை பின்னர் பாராட்டி கொண்டாடுவார்கள், அதே நிலைமை தான் சூப்பர் டீலக்ஸுக்கும்.

திருநங்கையாக

திருநங்கையாக

ராஜமாதாவாக நடித்த ரம்யா கிருஷ்ணன், ஆபாச பட நடிகையாகவும், ஹீரோவாக கலக்கி வரும் விஜய்சேதுபதி திருநங்கையாகவும் யாருமே ஏற்று நடிக்கத் தயங்கும் ரோல்களில் சர்வ சாதாரணமாக நடித்து அசத்தினர். போலீஸ் ஸ்டேஷனில் தனது விக்கை கழட்டி ஷில்பா அடிக்கும் காட்சி, உலகளவில் பாராட்டுக்களை அள்ளியது.

ஆஸ்கர் ரேஸ்

ஆஸ்கர் ரேஸ்

கடந்த ஆண்டு வெளியான படங்களில் ஆஸ்கர் ரேஸுக்கு இந்தியா சார்பில் பாலிவுட்டில் வெளியான கல்லி பாய் படம் நாமினேட் செய்யப்பட்டது. ஆனால், அந்த இடத்துக்கு, தமிழில் வெளியான சூப்பர் டீலக்ஸ் மற்றும் பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 படங்களும் தமிழ் சினிமா சார்பாக பரிந்துரை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அசந்து போன பாலிவுட்

அசந்து போன பாலிவுட்

சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய்சேதுபதியின் நடிப்பை பார்த்து பாலிவுட் திரையுலகமே அசந்து போனது. கடந்த ஆண்டு ஃபிலிம் கம்பேனியன் நடத்திய சினிமா ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஆலியா பட், விஜய் தேவரகொண்டா, பார்வதி என பலரும் விஜய்சேதுபதியின் நடிப்பை பாராட்டி தள்ளினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X