பெரட்டி வுடு.. செதற வுடு.. வாத்தி கம்மிங் வெளியாகி ஒரு வருஷம் ஆகிடுச்சு.. தெறிக்கவிடும் ரசிகர்கள்!

சென்னை: கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்த்து வாத்தி கம்மிங் பாடல் வெளியிடப்பட்டது.

ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தாமதமானது.

இந்நிலையில், வாத்தி கம்மிங் பாடல் வெளியாகி ஒரு வருஷம் ஆனதை தளபதி ரசிகர்கள் டிரெண்ட் செய்து தெறிக்க விட்டு வருகின்றனர்.

வாத்தி கம்மிங் விமர்சனம்

வாத்தி கம்மிங் விமர்சனம்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் வெளியான போது அதிகமான பாடல் வரிகளே இல்லை வெறும் சத்தம் மட்டுமே கேட்கிறது போன்ற விமர்சனங்கள் எழுந்தன.

உலகளவில் வைரல்

உலகளவில் வைரல்

ஆனால், பாடல் வெளியான கொஞ்ச நேரத்திலேயே காட்டுத் தீ போல உலகம் முழுக்க வைரல் ஆனது. லிரிக் வீடியோவுக்கு அனிருத் பக்காவாக நடனமாடினார். மாஸ்டர் இசை விழாவில் விஜய் அந்த பாட்டுக்கு போட்ட நடனத்தை பார்த்த ரசிகர்கள் வாத்தி கம்மிங்கிற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ஸ்டெப்களை போட்டு வீடியோக்களாக வெளியிட்டனர்.

ஒரு வருஷம் ஆகிடுச்சு

மாஸ்டர் படம் பொங்கலுக்கு வெளியாகி தியேட்டர்களிலும் ஒடிடியிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது வாத்தி கம்மிங் பாடல் வெளியாகி ஒரு வருஷம் ஆனதை #1YearOfVaathiComing என்கிற ஹாஷ்டேக்கை போட்டு தளபதி ரசிகர்கள் தெறிக்க விட்டு கொண்டாடி வருகின்றனர்.

மிரட்டல் டான்ஸ்

மிரட்டல் டான்ஸ்

மாஸ்டர் படத்தில் தளபதி விஜய் வாத்தி கம்மிங்கிற்கு வேற லெவலில் நடனமாடி அசத்தினார். தியேட்டரில் அந்த பாடலுக்கு ரசிகர்கள் பண்ண ரகளைகள் ஏராளம். மூச்சு வாங்கியும், மயக்கத்திலும் ஆடுவதை போலவும், அதிரடியாக பல ஸ்டெப்களையும் போட்டு விஜய் மிரட்டி இருந்தார்.

அடுத்த ஆட்டத்துக்கு வெயிட்டிங்

அடுத்த ஆட்டத்துக்கு வெயிட்டிங்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ள தளபதி 65 படத்தின் ஷூட்டிங் ரஷ்யாவில் அடுத்த மாதம் தொடங்குகிறது. வாத்தி கம்மிங் போல இன்னொரு வெறித்தனமான பாடலுக்காகவும் தளபதியின் தரமான நடனத்துக்காகவும் ரசிகர்கள் வெயிட்டிங்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X