ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விஜய் பாடிய பாடல்.. நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் #1YearOfVerithanam

சென்னை: "என் நெஞ்சில் குடியிருக்கும்" என ரசிகர்களை பார்த்து தளபதி விஜய் பேசும் டிரேட்மார்க் வசனத்தையே பாடலாக மாற்றி ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த "வெறித்தனம்" பாடல் வெளியாகி இன்றுடன் ஓரு வருடம் ஆகிறது.

Recommended Video

Bigil Verithanam massive record breaking | Entry Song

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் யூட்யூப் ரெக்கார்டுகளை எல்லாம் தெறிக்கவிட்ட "வெறித்தனம்" பாடல் ஒரு வருடத்தை கடந்ததை ரசிகர்கள் #1YearOfVerithanam என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.

முதல்முறை

முதல்முறை

உதயா, அழகிய தமிழ் மகன், மெர்சல், சர்கார், பிகில் என நடிகர் விஜய் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் காம்பினேஷனில் உருவான பல படங்களில் பாடல்கள் எல்லாமே வேற லெவல் ஹிட் தான். ஆனால், முதல்முறையாக பிகில் படத்தில் தான் ரஹ்மான் இசையில் தளபதி விஜய் இந்த வெறித்தனம் பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது.

புள்ளிங்கோ இருக்காங்க வேற இன்னா வோணும்

புள்ளிங்கோ இருக்காங்க வேற இன்னா வோணும்

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, கதிர், இந்துஜா, அம்ரிதா அய்யர், விவேக், யோகி பாபு, ஜாக்கி ஷெராஃப் என நட்சத்திர பட்டாளமே நடித்து கடந்த ஆண்டு தீபாவளி சரவெடியாக வந்த படம் பிகில். அந்த படத்தின் ஓப்பனிங் சாங், தளபதி புள்ளிங்கோக்களை கொண்டாடும் விதமாக அமைந்தது தான் அதன் வெற்றிக்கு முக்கிய காரணம்.

என்னாண்ட எல்லாம் நீதானே

என்னாண்ட எல்லாம் நீதானே

மெர்சல், சர்கார், பிகில் என தொடர்ந்து இசைப்புயல் இசையில் தளபதி விஜய்க்காக புதுப் புது வரிகளை களமிறக்கி தளபதி ரசிகர்களை கொண்டாட்ட மோடிலே வைத்து இருக்கும் பாடலாசிரியர் விவேக்கின் வரிகள் மற்றொரு பலமாக இந்த பாடலுக்கு அமைந்தது. என்னாண்ட எல்லாம் நீதானே.. உன்னாண்ட எல்லாம் நான் தானே என தளபதி பாட தியேட்டர் செலிபிரேஷன் சும்மா செதருச்சு என்றே சொல்லலாம்.

இசை வெளியீட்டு விழாவில்

இசை வெளியீட்டு விழாவில்

ரசிகர்களுக்காக பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய், அந்த பாடலை பாடிய விதத்தை கண்டு, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் அசந்து பார்த்தது. அந்த அளவுக்கு ஹிட்டான அந்த பாடல், யூட்யூபில் மிகப்பெரிய சாதனைகளையும் படைத்தது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியொவை தற்போது அதிகளவில் ரசிகர்கள் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

காத்திருப்பு

காத்திருப்பு

மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் பாடல்கள் எல்லாம் வெளியாகி சாதனை படைத்து வரும் நிலையில், அந்த படத்தின் ரிலீசுக்காக தளபதி ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். மேலும், ஒடிடியில் வேண்டாம் தியேட்டரில் தான் தளபதி தரிசனத்தை பார்த்து கொண்டாட வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வரும் பொங்கலுக்கு மாஸ்டர் படம் தியேட்டருக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X