இதுலையும் லேட்.. பேட்ட டிரெண்டிங்கிற்கு பிறகு டிரெண்ட் ஆகும் விஸ்வாசம் ஒரு வருஷ ஹாஷ்டேக்!

சென்னை: பேட்ட படத்திற்கு போட்டியாக கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் படம் தல அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

சிவா இயக்கத்தில் வெளியான விவேகம் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில், தல அஜித் மீண்டும் சிவாவுக்கே இயக்க வாய்ப்பளித்தது ஆரம்பத்தில் அஜித் ரசிகர்களுக்கே கஷ்டமாக இருந்தது.

ஆனால், தல அஜித் தன் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு விஸ்வாசமாக மெகா பிளாக்பஸ்டர் படத்தை சிவா கொடுத்து கெத்து காட்டினார்.

ஆனால், பேட்ட படத்தின் ஹாஷ்டேக் இன்று காலையிலேயே டிரெண்டாக ஆரம்பித்த நிலையில், அதற்கு பிறகு லேட்டாகத்தான் விஸ்வாசம் ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு டிரெண்ட் செய்யப்பட்டது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

மெகா பிளாக்பஸ்டர்

மெகா பிளாக்பஸ்டர்

சிவா இயக்கத்தில் வெளியான வீரம் படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் வெளியான வேதாளம், விவேகம் போன்ற படங்கள் சுமாரான வெற்றியையே பதிவு செய்தது. விமர்சனங்களும் அந்த படங்களுக்கு மிகவும் மோசமாக எழுந்த நிலையில், அதை எல்லாத்தையும் மறக்கடிக்கும் விதமாக விஸ்வாசம் படம் பக்கா பொங்கல் என்டர்டெயினராக ரிலீசாகி மெகா பிளாக்பஸ்டர் ஆனது.

விருதுகளை குவித்த விஸ்வாசம்

விருதுகளை குவித்த விஸ்வாசம்

சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்த ஜீ தமிழ் சினிமா விருது விழாவில் சிறந்த பொழுதுபோக்கு படம், சிறந்த நடிகை உள்ளிட்ட 7 விருதுகளை அஜித்தின் விஸ்வாசம் படம் தட்டிச் சென்றது. பல வருடங்களுக்கு பிறகு அஜித்தின் படத்திற்கு பல தரப்பில் இருந்தும் விருதுகள் குவிகின்றன.

ஒரு வருஷம் ஆகிடுச்சு

பேட்ட படத்துடன் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி விஸ்வாசம் படம் திரைக்கு வந்தது. இன்றுடன் விஸ்வாசம் படம் ஒரு வருஷம் கடந்துள்ள நிலையில், ரசிகர்கள் #1yearofviswasam ஹாஷ்டேக்கை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.

தல ரசிகர்களுக்கு நன்றி

விஸ்வாசம் திரைப்படத்தை வெற்றிப்படமாக மாற்றிய ரசிகர்களுக்கு நன்றி என இந்த ரசிகர் தல ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார்.

ஜெயிச்சுட்டோம் பங்காளிகளா

சத்ய ஜோதி தயாரிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அதே நாளில் ஜெயிச்சுட்டோம் பங்காளிகளா என சக்தி ஃபிலிம் ஃபேக்டரி போட்ட ட்வீட்டை தற்போது அந்த நிறுவனம் ஷேர் செய்து கொண்டாடி வருகிறது.

வீரம்.. விஸ்வாசம்

6 வருடத்திற்கு முன்னாடி தல அஜித் நடிப்பில் இதே நாளில் வீரம் படம் வெளியாகி ஹிட்டானது. கடந்த ஆண்டு விஸ்வாசம் படமும் இதே நாளில் வெளியாகி மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

அடுத்தது வலிமை தான்

கூஸ்பம்ப்ஸ் இன்ட்ரோ, டெரிஃபிக் இன்டர்வெல், எமோஷனல் கிளைமேக்ஸ் என சரியான மாஸ் என்டர்டெயினராக விஸ்வாசம் படம் கடந்த ஆண்டு வெளியானது. அடுத்து வலிமை படத்திற்காகத் தான் தல ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர் என இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X