For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தளபதி விஜய் ’பிகில்’ அடிச்சு ஒரு வருஷம் ஆகிடுச்சு.. டிரெண்டாகும் #1YrOfMegaBlockbusterBigil

  |

  சென்னை: இயக்குநர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் பிகில்.

  300 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி மிகப்பெரிய வசூல் சாதனையை அந்த படம் படைத்தது.

  இந்நிலையில், பிகில் படத்தின் முதல் வருட கொண்டாட்டத்தை ரசிகர்கள் #1YrOfMegaBlockbusterBigil என டிரெண்ட் செய்து தெறிக்க விடுகின்றனர்.

  ஒரு வருஷமாகிடுச்சு

  ஏஜிஎஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், இந்துஜா, அம்ரிதா அய்யர், வர்ஷா பொல்லம்மா, விவேக், யோகி பாபு என நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்த படம் பிகில். கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு சரவெடியாக ரிலீஸ் ஆன இந்த படத்தின் ஒரு வருட கொண்டாட்டத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

  வெறித்தனம் பண்ணும் புள்ளைங்கோ

  வெறித்தனம், புள்ளைங்கோ என வெகுஜன மக்களை ஈர்க்கக் கூடிய ஏகப்பட்ட வார்த்தைகளை இந்த படத்தில் பயன்படுத்தி தன் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்காக தளபதி விஜய் போட்ட பிரம்மாண்ட ஆட்டம் தான் பிகில். விமர்சன ரீதியாக சறுக்கினாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. #1YrOfMegaBlockbusterBigil என்ற ஹாஷ்டேக்கை தளபதி ரசிகர்கள் வெறித்தனமாக டிரெண்ட் செய்து வருகின்றனர்.

  மேக்கிங் காட்சிகள்

  பிகில் படத்தின் ஒரு வருட கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஏகப்பட்ட அன்சீன் மேக்கிங் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஏற்கனவே பிகில் படத்தில் ராயப்பன், மைக்கேல் மேட்சிங் சீன் எல்லாம் எப்படி எடுத்தார்கள் என்கிற வி.எஃப்.எக்ஸ் பிரேக் டவுனாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

  ஸ்டேடியம் செட்டப் வீடியோ

  பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் இவிபி பூங்காவில் தான் பிக் பாஸ் ஷூட்டிங்கும் நடைபெற்றது. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்காக பிரம்மாண்டமாக ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் போட்ட ஃபுட்பால் ஸ்டேடியம் செட்டின் வீடியோவையும் ரசிகர்கள் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

  ராயப்பன் ராவடி

  ராவடி பண்ணும் ராசாவா நிப்பேன் டா என்னோட கில்லா மேல என மைக்கேல் ஆடி பாடினாலும், இதுவரை நடித்திராத வயதான ராயப்பன் கேரக்டரில் திக்குவாய்லாம் வச்சி பேசி, நடித்து தளபதி அசால்ட்டு பண்ணிட்டாருன்னு தான் சொல்லணும், பிகில் 2 எடுத்தாலும், ராயப்பன் கதாபாத்திரத்தை வைத்தே ப்ரீக்வலாக எடுங்க என்கிற கோரிக்கையை தான் ரசிகர்கள் அட்லியிடம் வைத்து வருகின்றனர்.

  ஹாட்ரிக்

  ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லி, நண்பன் படத்தின் ஷூட்டிங்கின் போதே தளபதி விஜய்யிடம் நல்ல பழக்கம் கொண்டார். ராஜா ராணி ஹிட் கொடுத்த பிறகு, தெறி படத்தின் கதையை சொல்லி ஓகே பண்ண அவர், தொடர்ந்து மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றி அடித்துள்ளார். எங்க அண்ணனுக்கு நான் தான் டா பண்ணுவேன் என பேசியதெல்லம் ரியல் வெறித்தனம்.

  செம ஜோடி

  ஏ.ஆர். ரஹ்மான் இசையில், வெறித்தனம் ஆடுறதுக்கும், சிங்க பெண்ணே கூஸ் பம்ப்ஸ் ஆகுறதுக்கும்னு இருந்த இடத்துல, ரொமான்ஸுக்காக அவர் போட்ட உனக்காக வாழ நினைக்கிறேன் பாட்டு வேற லெவல். சிவகாசி, வில்லு படத்துக்கு அப்புறம் விஜய்யோடு ஜோடி போட்டு நயன் நடிச்சதை பார்த்து ரசிகர்கள் ரசிச்சிக்கிட்டே இருக்காங்க..

  சிங்கப்பெண்ணே

  மாதரே என ஆரம்பித்து, சிங்கப்பெண்ணே என பெண்களுக்கான ஒரு தேசிய கீதத்தையே இந்த படத்துல ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்கி வச்சிட்டாரு, இப்பலாம், பெண்கள் ரொம்ப போல்டா ஒரு காரியம் செஞ்சாலே அவங்கள சிங்கப்பெண்ணே என சொல்கிற அளவுக்கு பிகில் படமும் ரஹ்மானின் இசையும் விவேக்கின் அந்த வரியும் வரலாறு ஆகிடுச்சு.. சீக்கிரமே மாஸ்டர் ரிலீஸ் பண்ணுக்கப்பா!

  English summary
  Thalapathy Vijay’s Bigil one year release hashtag trending in Twitter. Actor Vijay’s last movie Bigil smashed all record in TN box offce last year.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X