2.0: இந்தியா, வெளிநாடுகளில் எத்தனை கோடி வசூல்?- விபரம் இதோ
Recommended Video

சென்னை: 2.0 படத்தின் முதல் நாள் வசூல் விபரம் தெரிய வந்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்த 2.0 படம் நேற்று பிரமாண்டமாக 10,000 தியேட்டர்களில் வெளியானது.
படத்தை பார்த்த அனைவரும் இது ஒரு புது அனுபவம் என்று பிரமிப்பாய் தெரிவித்துள்ளார்.

தியேட்டர்கள்
சென்னையில் மட்டும் 2.0 ரூ. 2.64 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் சர்காரின் முதல் நாள் வசூல் சாதனையை 2.0 முறியடித்துள்ளது. சர்கார் சென்னையில் முதல் நாள் ரூ. 2.37 கோடி வசூலித்தது. சென்னையில் ரிலீஸான அன்றே அதிகம் வசூல் செய்த படமாக சர்கார் இருந்தது. சர்கார் தீபாவளி அன்று ரிலீஸாகி அதிகம் வசூலித்தது, 2.0 வார நாளில் வெளியாகி அந்த சாதனையை முறியடித்துவிட்டது.

2.0
2.0 படம் இந்தியில் ரூ. 20. 5 கோடி வசூலித்துள்ளது. தமிழகத்தில் போன்று வட மாநிலங்களில் அதிகாலை காட்சிக்கு தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல் ஆகவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ. 19 கோடி வசூலித்துள்ளது 2.0

நியூசிலாந்து
அமெரிக்காவில் 2.0 படம் ரிலீஸான அன்று ரூ. 6.30 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் அமீரகத்தில் ரூ. 5.21 கோடியும், நியூசிலாந்தில் ரூ. 11.11 லட்சமும், ஆஸ்திரேலியாவில் ரூ. 58.46 லட்சமும் வசூல் செய்துள்ளது.

வார இறுதி நாட்கள்
2.0 படம் வார இறுதி நாட்களில் பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாள் வசூலில் 2.0 நிச்சயம் புதிய சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு வீணாகாது.


Click it and Unblock the Notifications











