2.0 வசூல் நிலவரம்.. 2வது நாளில் தியேட்டர்கள் காத்தாடினாலும்.. ரூ. 100 கோடி வசூலாம்!
2.0 திரைப்படம் 2ம் நாளில் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Recommended Video

சென்னை: 2.0 படத்தின் வசூல் 3வது நாளில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் முதல் நாளில் 115 கோடி ரூபாய், அதாவது இந்தியாவில் 80 கோடியும், வெளிநாடுகளில் 35 கோடி ரூபாயும் வசூலித்தது 2.0 திரைப்படம். ஆனால் இரண்டாம் நாளான நேற்று தியேட்டர்கள் பல காலியாக காணப்பட்டன.
நேற்று விடுமுறை தினம் இல்லை என்பதால் படத்தின் வசூலில் சிறிய பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் இன்று விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வசூல் அதிகரிப்பு:
முதல் நாளைவிட இன்று 30 சதவீதம் வரை வசூல் அதிகரிக்கும் என வர்த்தக மதிப்பீட்டாளர்கள் சிலர் டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக 3டி திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு அதிகரித்துள்ளது. 2டி தியேட்டர்களிலும் டிக்கெட் விற்பனை அதிகரித்துள்ளது.

கணிப்பு:
2வது நாளான நேற்று சென்னையில் மட்டும் ரூ2.17 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது 2.0 திரைப்படம். மொத்தமாக இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்த்து 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தோல்விப் படமா?
3ம் நாளான இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால், இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என வர்த்த மதிப்பீட்டாளர்கள் கணிக்கின்றனர். இருப்பினும், படத்தின் பட்ஜெட் மிகப்பெரிது என்பதால் போட்ட காசை எடுக்க முடியுமா என்பது சந்தேகமே. இதனால் பாக்ஸ் ஆபிஸ் கணக்குபடி, 2.0 திரைப்படம் தோல்விப்படமாக மாறலாம் என்றும் ஒரு சில வர்த்தக மதிப்பீட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எதிர்பார்ப்பு:
2.0 படத்தைப் பொறுத்தவரை வேலைநாளான வியாழக்கிழமை ரிலீசானது. ஆனால், மற்ற பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் வெளியான படங்களைவிட இதன் வசூல் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் முதல்நாளில் 22 கோடி ரூபாயும், 2ம் நாளில் 16 கோடி ரூபாயும் வசூலாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வசூலானது விடுமுறை நாளான இன்றும், நாளையும் இருமடங்காகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications