என்னடா இது சிட்டிக்கு வந்த சோதனை.. முதல் நாள் வசூலில் சர்கார், கபாலியை முந்த முடியாத 2.0!
Recommended Video

சென்னை: தமிழகத்தில் சர்கார், கபாலி ஆகிய படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை 2.0 படத்தால் முறியடிக்க முடியவில்லை.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்த 2.0 படம் நேற்று பிரமாண்டமாக ரிலீஸானது. படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.
விஜய்யின் சர்காரை ஒரு இடத்தில் தோற்கடித்த 2.0, மறு இடத்தில் தோற்றுவிட்டது.

2.0
ரிலீஸான அன்றே சென்னையில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை சர்காரிடம் இருந்து பறித்துவிட்டது 2.0. ஆனால் தமிழகத்தில் சர்கார் படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை 2.0 படத்தால் முறியடிக்க முடியாமல் போனது ஆச்சரியமான விஷயமாக உள்ளது.
ஆந்திர பாக்ஸ் ஆபீஸ்
தமிழகத்தில் சர்கார் படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை 2.0 முறியடிக்கவில்லை என்கிறது ஆந்திர பாக்ஸ் ஆபீஸ். 2.0 படம் நேற்று மட்டும் தமிழகத்தில் ரூ. 20 கோடி வசூல் செய்துள்ளது. இது கபாலி படத்தின் முதல் நாள் வசூலை விட குறைவு என்பது வேதனை.

முதல் நாள் வசூல்
சர்கார் படம் ரிலீஸான அன்று தமிழகத்தில் ரூ. 31 கோடி வசூல் செய்தது. பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி படம் வெளியான அன்று மட்டும் தமிழகத்தில் ரூ. 21.5 கோடி வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லூரிகள்
பள்ளி, கல்லூரிகளில் தேர்வு நடப்பதாலும், வார நாளில் படம் வெளியானதாலும் வசூல் சரியாக வரவில்லை என்று கூட கூறலாம். வார இறுதி நாட்களில் 2.0 வசூல் பிக்கப்பாகிவிடும் என்று சினிமா வர்த்தக நிபுணர்கள் நம்புகிறார்கள். நாமும் நம்புவோமாக.


Click it and Unblock the Notifications











