2.0 படம் ரிலீஸுக்கு முன்பே ரூ. 370 கோடி வசூல்: எப்படி தெரியுமா?
Recommended Video

சென்னை: 2.0 படம் ரிலீஸுக்கு முன்பே ரூ. 370 கோடி வசூலித்துவிட்டது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படம் வரும் 29ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை ரூ. 600 கோடி செலவில் தயாரித்துள்ளது லைகா நிறுவனம்.

ஷங்கர் என்கிற ஒருவரை மட்டுமே நம்பி லைகா பணம் போட்டதாக ரஜினியே தெரிவித்தார். இந்நிலையில் படம் ரிலீஸாகும் முன்பே ரூ. 370 கோடி வசூலித்துவிட்டது.
படத்தின் சாட்டிலைட் உரிமம் ரூ. 120 கோடிக்கும், டிஜிட்டல் உரிமை ரூ. 60 கோடிக்கும், வடக்கு பக்க உரிமை(north belt rights) ரூ. 80 கோடிக்கும், ஆந்திரா/தெலுங்கானா உரிமை ரூ. 70 கோடிக்கும், கர்நாடகா உரிமை ரூ. 25 கோடிக்கும், கேரளா உரிமை ரூ. 15 கோடிக்கும் போயுள்ளது.
இந்த படம் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினி படம், அதிலும் ஷங்கர் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. நல்ல கதை இருந்தால் ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடிவிடுவார்கள்.


Click it and Unblock the Notifications











