2.0 பட வசூல் ரூ. 500 கோடிப்பு: சொல்கிறது லைகா
Recommended Video

சென்னை: 2.0 படம் ரூ. 500 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்த 2.0 படம் ரிலீஸான மூன்றே நாட்களில் உலக அளவில் ரூ. 200 கோடி வசூல் செய்தது.
அதன் பிறகு அடுத்த நாளே ரூ. 200 கோடி வசூலித்தது. இந்நிலையில் மேலும் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது 2.0
ரூ. 500 கோடி
2.0 படம் ரிலீஸான ஒரே வாரத்தில் உலக அளவில் ரூ. 500 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

சாதனை
ரூ. 500 கோடி வசூல் செய்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது 2.0. இது போன்ற சாதனைகளை சூப்பர் ஸ்டாரால் மட்டுமே செய்ய முடியும் என்கிறார்கள் அவரின் தீவிர ரசிகர்கள்.
த்ருவ்
ரஜினி படங்கள் செய்த சாதனைகளை பட்டியலிட்டு அவரை புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார் நடிகர் விக்ரமின் மகன் த்ருவ்.
ரசிகர்கள்
லைகா நிறுவனத்தின் ட்வீட்டை பார்த்த ரஜினி ரசிகர்கள் 2.0 படம் இந்த வார இறுதியில் ரூ. 700 கோடியை தொடும் என்கிறார்கள். தலைவர் மீது உள்ள நம்பிக்கை.


Click it and Unblock the Notifications











