ரஜினியின் 2.0... முதல் நாள் முதல் காட்சி எத்தனை மணிக்கு தெரியுமா?
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள 2.0 திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.
Recommended Video

சென்னை: ரஜினியின் 2.0 படம் நாளை வெளியாகும் சூழலில், சென்னையில் உள்ள திரையரங்குகளில் அதிகாலை காட்சிகள் திரையிடப்படுமா என எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள கிராப்பிக்ஸ் பேன்டசி திரைப்படம் 2.0. இப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.

வழக்கமாக பெரிய நடிகர்களின் படங்களுக்கு அதிகாலை காட்சிகள் திரைப்படப்படும். ஆனால் சமீபத்தில் சர்கார் திரைப்படம் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், அதிகாலை காட்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.
இதனால் 2.0 படத்துக்கு அதிகாலை காட்சிகள் கிடையாது என கூறப்படுகிறது. இருப்பினும் சென்னையில் உள்ள காசி, ரோகினி உள்ளிட்ட தியேட்டர்களில் நாளை காலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும் என தெரிகிறது.
இந்த முதல் காட்சிக்கு ரூ.550 வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனினும் நீதிமன்ற உத்தரவை மீறி அதிகாலை காட்சி திரையிடப்படுமா என்ற சந்தேகமும் ஒருபக்கம் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.


Click it and Unblock the Notifications











