twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    '2.0'... முதல் நாளிலேயே சும்மா அதிரவைக்கும் வசூல் சாதனை...!

    முதல் நாள் வசூலில் புதிய சாதனை படைத்திருக்கிறது 2.0 திரைப்படம்.

    |

    Recommended Video

    2.0 முதல் நாள் அதிர வைக்கும் வசூல் சாதனை- வீடியோ

    சென்னை: ஏற்கனவே வந்த எல்லா படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்து, வசூலில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறது ரஜினியின் 2.0 திரைப்படம்.

    உலகம் முழுவதும் நேற்று வெளியான 2.0 திரைப்படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வழக்கம் போல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே படத்தை பாராட்டி வருகின்றனர்.

    2point0 first day box office collection

    சுமார் 550 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவான இப்படம், வசூலில் சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ரிலீசான பெரும்பாலான தியேட்டர்களில் முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

    ஓன்லைன் டிக்கெட் முன்பதிவில் புதிய சாதனையை நிகழ்த்தியது 2.0. படம் ரிலீசான நேற்று ஒரு நாளில் மட்டும், சென்னையில் ரூ.2.64 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது 2.0. இது சர்கார், மெர்சல், விவேகம், காலா ஆகிய படங்களைவிட அதிகம்.

    2.0 திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 10,000 ஆயிரம் தியேட்டர்களில் வெளியானது. இது அனைத்தையும் கணக்கிட்டால் முதல் நாள் வசூல் பல கோடிகளை தாண்டும் என்கின்றனர் சினிமா துறையினர். தோராயமாக 60 முதல் 65 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கக் கூடும் என கணக்கிடுகின்றனர்.

    இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    The #2point0 movie would have collected 60 crores worldwide approximately on its first day.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X