2.0 இந்தி வசூல்: இந்த ஆளு எல்லாம் சிரிக்கும்படி ஆகிவிட்டதே!

By Siva

Recommended Video

2வது நாளே காற்று வாங்கும் தியேட்டர்கள்- வீடியோ

மும்பை: 2.0 படம் இந்தியில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்தின் முதல் நாள் வசூல் விபரம் வெளியாகி வருகிறது. 2.0 படம் ரிலீஸான அன்று தமிழகத்தில் ரூ. 20 கோடி வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் 2.0 இந்தி படத்தின் வசூல் நிலவரமும் கவலை அளிப்பதாக உள்ளது.

2.0

2.0

2.0 படம் இந்தியில் ரிலீஸான அன்று இந்தியாவில் ரூ. 20.5 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட நிலையில் இந்த வசூல். அகஷய் குமார் பாலிவுட்டில் பெரிய ஆள் என்பதால் கூடுதலாக வசூல் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் இந்த வசூலும் மோசம் எல்லாம் கிடையாது.

தியேட்டர்கள்

தியேட்டர்கள்

2.0 இந்தி படம் ஓடும் தியேட்டர்களில் நேற்று காலை காட்சிக்கு 40 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன. காலை காட்சிகளை பொருத்த வரை தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்(65%), பாகி 2(57.5%), சஞ்சு(55%), கோல்டு(52.5%), ரேஸ் 3(50%), சத்யமேவ ஜெயதே(45%), பத்மாவத்(42.5%) ஆகிய படங்களுக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது 2.0.

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார், ரஜினிகாந்த் இருந்தும் 2.0 இந்தி படத்தால் பெரிய அளவில் வசூல் செய்ய முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. 2.0 இந்தி படத்தின் முதல் நாள் வசூல் நிச்சயம் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படியாகிவிட்டது. இருப்பினும் ரூ. 20 கோடியும் சாதாரண விஷயம் இல்லை.

கேஆர்கே

2.0 இந்தி வசூல் சுமாராகிவிட்டதால் பாலிவுட்டின் நம்பர் ஒன் விமர்சகர் என்று சுயதம்பட்டம் அடிக்கும் இந்த கே.ஆர்.கே. எல்லாம் ஓவராக பேசுகிறார். எல்லாம் நேரம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X