லைகா குசும்புக்காரன், ரஹ்மானை வச்சு விளம்பரம் தேடப் பாக்குறான்: ரசிகாஸ்
சென்னை: 2.0 படம் சீனாவில் ரிலீஸாவது குறித்த ஏ.ஆர். ரஹ்மானின் ட்வீட்டை பார்த்தவர்கள் லைகா நிறுவனம் ரொம்ப தெளிவு என்கிறார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 2.0 படத்தை வரும் ஜூலை மாதம் 12ம் தேதி சீனாவில் ரிலீஸ் செய்ய உள்ளனர். இந்திய படங்களை சீனர்கள் கொண்டாடி வரும் நேரத்தில் 2.0 படத்தை அங்கு ரிலீஸ் செய்கிறார்கள்.
இந்நிலையில் படத்திற்கான விளம்பர வேலையை இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானிடம் இருந்து துவங்கியுள்ளனர்.
ரஹ்மான்
சீனாவில் 2.0... நீங்க ரெடியா? என்று கேட்டு ட்வீட் செய்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். ஓரிரு வார்த்தைகளில் ட்வீட் செய்வது தான் ரஹ்மானின் ஸ்டைல். ஆனால் அதிகம் எழுதாவிட்டாலும் அவரின் ட்வீட்டுகள் வைரலாகிவிடும். இந்நிலையில் தான் அவர் 2.0 பற்றி ட்வீட் போட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

செல்வாக்கு
ட்விட்டரில் இசைப்புயலுக்கு செல்வாக்கு அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும். அதை மனதில் வைத்து தான் லைகா நிறுவனம் ஏ.ஆர். ரஹ்மானை வைத்து படத்திற்கு விளம்பரத்தை துவங்கியுள்ளது. சும்மா சொல்லக் கூடாது லைகா தெளிவு தான். காசு போட்டிருக்கிறார்களே, தெளிவாக இருந்தால் தான் அதை எடுக்க முடியும் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
ரஜினி ரசிகர்கள்
ஏ. ஆர். ரஹ்மானின் ட்வீட்டை பார்த்த ரஜினி ரசிகர்களோ நாங்க ரெடி சார் என்று தெரிவித்துள்ளனர். கிராபிக்ஸில் சீனாக்காரன் வல்லவன். இந்த படத்தை பார்த்தால் கழுவிக் கழுவி ஊத்தப் போகிறான் என்று சிலர் விமர்சித்துள்ளனர். சீனாவில் 2.0 படத்திற்கு எத்தகைய வரவேற்பு கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். காத்திருப்போம்.

ட்வீட்டுகள்
இந்தி திணிப்பை கிண்டல் செய்தும், பின்னர் புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தில் திருத்தம் செய்ததை வரவேற்றும் ஏ.ஆர். ரஹ்மான் போட்ட ட்வீட்டுகள் வைரலாகின. இரண்டுமே மாஸ் ட்வீட்டுகள் என்று தமிழர்கள் கொண்டாடினார்கள். இரண்டாவது ட்வீட்டில் அவர் தமிழில் எழுதியிருந்ததால் அர்த்தம் புரியாமல் இந்திக்காரர்கள் குழம்பினார்கள். இந்நிலையில் தான் ரஹ்மான் இன்று 2.0 பற்றி ட்வீட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











