twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஷங்கரை ஏமாற்றிய 2.0 - சீனாவில் 2 நாள் வசூல் 20 கோடி ரூபாய் தான்

    |

    Recommended Video

    2.0 வசூல் பற்றிய உண்மை என்ன?.. எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம்- வீடியோ

    பீஜிங்: ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான 2.0 திரைப்படம் சீனாவில் வெளியான 3 நாட்களில் 20 கோடி ரூபாய் மட்டுமே வசூலானதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படத்தின் வசூல் ஷங்கரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இயக்குநர் ஷங்கர் படம் என்றாலே பிரமாண்டம் என்பது அனைவருக்கும் தெரியும். இவர் இயக்கிய முதல் படமான ஜென்டில் மேன் தொடங்கி சமீபத்தில் வெளியான இந்தியன் 2 வரையிலும் இது தொடர்கிறது. அதிலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இவர் இயக்கிய பிரமாண்டத்தின் உச்சமான எந்திரன் திரைப்படம் 100 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடியதோடு வசூலிலும் சாதனை படைத்தது.

     2.0 movie released in China had collected only Rs 20 crore

    இதனையடுத்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க அப்போதே திட்டமிடப்பட்டது. சினிமாவில் பொதுவாகவே ஒரு சென்டிமெண்ட் உண்டு. ஒரு திரைப்படம் நன்றாக ஓடி வசூலாகிவிட்டால், அதன் இரண்டாம் பாகத்தை உடனடியாக எடுத்து வெளியிடுவது வழக்கம். அந்த சென்டிமெண்ட்டில் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்தை எடுக்க திட்டமிடப்பட்டது.

    நடிகைகள் தேவை... போலி விளம்பரங்களை நம்பி ஏமாறவேண்டாம்நடிகைகள் தேவை... போலி விளம்பரங்களை நம்பி ஏமாறவேண்டாம்

    ஆனால், அதற்கு கிட்டத்தட்ட 5 பில்லியனுக்கு மேல் செலவாகும் என்பதால், அந்தப்படத்தை தயாரிக்க யாரும் முன்வரவில்லை. இதனால் அப்போதைக்கு 2.0 திரைப்படத்தை எடுக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு லைகா நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்க முன்வந்ததை அடுத்து 2.0 படம் மின்னல் வேகத்தில் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்டது.

     2.0 movie released in China had collected only Rs 20 crore

    மிகப் பெரிய எதிர்பார்ப்புடன், ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில், சுமார் 570 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு கடந்த ஆண்டு வெளியான 2.0 திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியும், வசூலையும் பெறவில்லை.

    பிரமாண்டமாக எடுக்கப்பட்ட பாகுபலி படத்தின் வசூலை மிஞ்சிவிடும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப்போனதோடு ஏமாற்றமே மிஞ்சியது. தமிழிலும், தெலுங்கிலும் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் இந்தியில் வியாபார ரீதியில் மட்டுமாவது ஓரளவு லாபத்தை கொடுத்தது.

    இந்நிலையில் சீனாவில் 2.0 படம் வெளியாகி மூன்று நாட்களில் சராசரியாக 20 கோடி மட்டுமே வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் மேலும் சில நாட்கள் ஓடினாலும் 50 கோடியாவது வசூல் ஆகுமா என்பதே சந்தேகம் தான்.

    சீனாவிலாவது நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி குவிக்கும் என்று நம்பி இருந்த இயக்குனர் ஷங்கருக்கு இது ஒரு பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. இருப்பினும் ஒரு தமிழ் திரைப்படம் சீனாவில் வெளியாகியுள்ளது என்பது தமிழ் திரையுலகிற்கு கிடைத்த பெருமை.

    நடிகை ஸ்ரீதேவி நடித்த மாம் திரைப்படம் சீனாவில் வெளியாகி 100 கோடி வசூலை தாண்டியது. அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் 1200 கோடிக்கும் மேல் வசூலில் பட்டையை கிளப்பியது. இயக்குனர் ஷங்கர் தற்போது இயக்கி வரும் இந்தியன் 2 படமாவது நல்ல வசூலை கொடுக்கும் என்று படக்குழுவினர் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

    English summary
    It is reported that Shankar directed 2.0 movie with Rajinikanth starrer released in the last few days with huge anticipation in China has grossed Rs 20 crores in 3 days.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X