பாகுபலி 2 பட வசூலை முந்திய 2.0: அட, உண்மை தாங்க

By Siva

Recommended Video

ரஜினி 68வது பிறந்தநாள் பரிசு 2.0 வசூல் | Rajinikanth's 68th birthday gift

சென்னை: ரஜினியின் 2.0 பட வசூல் பாகுபலி 2 படத்தை முந்தியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்த 2.0 படம் உலக அளவில் ரூ. 620 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை பாக்ஸ் ஆபீஸில் 2.0 புதிய சாதனை படைத்துள்ளது.

பாகுபலி 2

பாகுபலி 2

சென்னை பாக்ஸ் ஆபீஸில் பாகுபலி 2 ரூ. 18.85 கோடி வசூல் செய்தது தான் அதிக தொகையாக இருந்தது. இந்நிலையில் ரிலீஸான 12 நாட்களில் 2.0 படம் சென்னை பாக் ஆபீஸில் ரூ. 19.03 கோடி வசூல் செய்து பாகுபலி 2 படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

பாக்ஸ் ஆபீஸ்

பாக்ஸ் ஆபீஸ்

2.0 படம் சென்னையில் மட்டுமே பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. உலக அளவில் பாகுபலி 2 செய்த வசூல் சாதனையை 2.0 முறியடிக்கவில்லை. அது முடியவும் முடியாது. ஓரிரு நாட்களில் பாகுபலி முதல் பாகத்தின் வசூலை 2.0 முறியடிக்கக்கூடும்.

பிளாக் பஸ்டர்

பிளாக் பஸ்டர்

2.0 படம் இந்தியில் மட்டும் இதுவரை ரூ. 166. 75 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியில் டப் செய்யப்பட்ட படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 2.0 இந்தி படம் ரூ. 200 கோடியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியில் புதுப்படங்கள் வெளியாகியுள்ள போதிலும் 2.0 வசூல் பாதிக்கப்படவில்லை.

மொழி

மொழி

பாகுபலி, பாகுபலி 2 படங்களை அடுத்து 2.0 படத்திற்கு இந்தி ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்துள்ளனர். 2.0 படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததும் ஒரு பிளஸ் என்று கூறலாம். 2.0 இந்தி படம் வசூல் வேட்டையை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X