'2.0': நல்ல வேளை ஷங்கர் ரஜினி பேச்சை கேட்கவில்லை
Recommended Video

சென்னை: 2.0 படத்தை பார்த்த பிறகு நல்ல வேளை ஷங்கர் ரஜினியின் பேச்சை கேட்கவில்லை என்று தோன்றுகிறது.
படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் ரஜினியை பார்த்து உனக்கு வயசானாலும் ஸ்டைலும், அழகும் குறையவே இல்லை என்பார். அது உண்மை தான். ஆனால் 2.0 படம் பார்த்த பிறகு ரஜினிக்கு வயசே ஆகவில்லை என்று சொல்வோம்.
அந்த அளவுக்கு மனிதர் ஒரு இளைஞரை போன்று சுறுசுறுப்பாக நடித்துள்ளார்.

உழைப்பு
40 வயதுடன் ஓய்வு பெற நினைத்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ரஜினியின் உழைப்பை பார்த்தே அந்த முடிவை கைவிட்டார். எத்தனை வயதானாலும் செய்யும் தொழிலே தெய்வம் என்று இருந்தால் வயது நமக்கு பெரிதாக தெரியாது என்பதை ரஜினி நிரூபித்துள்ளார். தியேட்டரில் அவரை பார்த்த ரசிகர்கள் அவருக்கு 67 வயதாகிவிட்டது என்று கூற முடியாத அளவுக்கு உள்ளார் என்கிறார்கள்.

ரஜினி
2.0 படத்தில் சூட்டெல்லாம் போட்டு நடிக்க கஷ்டமாக இருக்கிறது, உடல்நலம் வேறு சரியில்லை, நான் விலகிவிடுகிறேன் என்று ரஜினி சொல்லியும் ஷங்கர் கேட்கவில்லை. ஷங்கர் அன்று அடம் பிடித்து ரஜினியை போக விடாததன் பலன் இன்று கிடைத்துள்ளது. சிட்டி கதாபாத்திரத்தில் ரஜினி தெறிக்கவிட்டுள்ளார். நல்ல வேளை ஷங்கர் ரஜினியின் பேச்சை கேட்டு அவரை விலக சம்மதிக்கவில்லை.

3.0
3.0 எடுக்கும் ஐடியா இருக்கு. ஆனால் ரஜினி சார் நடித்தால் மட்டுமே எடுப்பேன். சிட்டி கதாபாத்திரத்தில் ரஜினி சாரை தவிர வேறு யாரையும் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்று ஷங்கர் கூறுவதில் தவறே இல்லை. இன்று தியேட்டர்களில் சிட்டி என்ட்ரி கொடுத்த உடன் விசில் சத்தம் காதை கிழித்தது.

புது அனுபவம்
2.0 படத்தை பார்த்தவர்கள் அனைவரும் சொல்லும் ஒரு வார்த்தை வேற லெவல். ரஜினி-தி பாஸ், அக்ஷய் குமார்-செம. படத்தை ஹாலிவுட் ரேஞ்சுக்கு கொடுத்துள்ளார் ஷங்கர். ஒரு சிம்பிளான கதையை அனைவரும் வியக்கும் வகையில் பிரமாண்டமாக கொடுத்து ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை அளித்துள்ளார் ஷங்கர்.


Click it and Unblock the Notifications











