2.0.. ஷங்கர் இயக்கிய படங்களிலேயே இது தான் மிகக்குறைவு.. எதில் தெரியுமா?

ஷங்கர் இயக்கிய படங்களிலேயே 2.0 தான் மிகக்குறைவான நேரம் ஓடும் படம்.

Recommended Video

வைரலாகும் சிட்டி ரோபோ சிலை, 2. 0, படம் 2. 30 மணி நேர நீளம்- வீடியோ

சென்னை: ஷங்கர் இயக்கிய படங்களிலேயே மிகக் குறைவான நேரம் ஓடும் படம் ரஜினி நடித்துள்ள 2.0 படம் தான் எனத் தெரிய வந்துள்ளது.

பிரமாண்டத்திற்குப் பேர் போன ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் எந்திரன். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை 2.0 என்ற பெயரில் உருவாக்கியுள்ளனர். இப்படத்தையும் ஷங்கரே இயக்க, ரஜினி நாயகனாக நடித்துள்ளார்.

2.0S FINAL RUNTIME AND CUTS REVEALED!

ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நாயகியாக நடித்துள்ளார். வில்லனாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் நடிப்பில் மிரட்டியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை, அதாவது நவம்பர் 29ம் தேதி இப்படம் ரிலீசாக இருக்கிறது. இப்படத்திற்கு சென்சாரில் யுஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ரன்னிங் டைம் பற்றிய விபரம் தெரிய வந்துள்ளது. இப்படம் 2 மணி 28 நிமிடம் 52 நொடிகள், அதாவது 148.52 நிமிடங்கள் ஓடக்கூடியதாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை வெளியாகியுள்ள ஷங்கர் படங்களிலேயே இது தான் மிக குறைவு என கூறப்படுகிறது.

இப்படத்தை சென்சாரில் எந்த இடத்திலும், எந்தக் காட்சியையும் கட் செய்யவில்லையாம். சில இடங்களில் சில வார்த்தைகளை மட்டும் மியூட் செய்துள்ளனராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X