twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செல்போனை எடுத்தவனுக்கு செல்போனால தான் சாவு: லீக்கான 2.0 படக் கதை

    |

    சென்னை: 2.0 திரைப்படத்தின் கதை லீக் ஆகியுள்ளது.

    ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்‌ஷய்குமார் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் 2.0. சமீபத்தில் இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

    தற்போது 2.0 திரைப்படத்தின் கதை லீக் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இயக்குனர் ஷங்கருடைய முந்தைய படங்கள் எல்லாவற்றிலுமே, முக்கியமான சமூக கருத்து இருக்கும். சமூகத்திற்கு தேவையான ஒரு கருத்தை மையமாக வைத்துக் கொண்டு அதை ஜனரஞ்சக படமாக ரசிக்கும் விதத்தில் கொடுப்பது அவருடைய பாணி.

    அந்த வகையில், தொழில்நுட்பம் என்ற பெயரில் இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் மனிதர்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் இப்படம் இருக்கும் என சொல்லப்படுகிறது. முக்கியமாக, செல்போன் பயன்பாட்டிற்கு வைக்கப்படும் செல்போன் கோபுரங்களால் சிட்டுக்குருவி இனம் பெருவாரியாக அழிந்துவிட்டது. இந்த நிலை நீடிக்கும்போது எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதே கதையாம்.

    2050

    2050

    2.0 படத்தின் கதை 2050 ல் நடக்கிறது என்பது தெரிந்த விஷயம். எந்திரன் படம் முடிந்த இடத்திலிருந்து தான் படம் ஆரம்பாகிறது. அதாவது சிட்டுக்குருவி, தூக்கனாங் குருவி, புறா என ஒவ்வொரு பறவை இனமாக அழிவை சந்தித்து வருகின்றன. ஒரு கட்டத்தில் தங்களுடைய அழிவைத் தடுத்தாக வேண்டுமென்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றன.

    போர்க்கொடி

    போர்க்கொடி

    மனிதன் எப்படி பரிணாம வளர்ச்சியடைந்து அறிவியல் அதிசயங்களை நிகழ்த்துகிறானோ, அதற்கு சவால் விடும் வகையில் மனித சக்திக்கு எதிராக பறவைகள் போர்க்கொடி தூக்குகின்றன. இந்த உலகம் மனிதனுக்காக மட்டுமே உள்ளது என்ற ஆணவத்தோடு உலகைக் கட்டியாள நினைக்கும் மனிதர்களுக்கு எதிராக பறவைகள் கிளம்புகின்றன.

    காரணம்

    காரணம்

    கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்பதுபோல், பறவைகளின் அழிவுக்கு காரணமாக இருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் மனிதனுக்கு அதே தொழில்நுட்பத்தால் அழிவு என்ற அடிப்படையில் என்று கதை நகருகிறதாம். அதற்கு சாட்சியாக 2.0 டீசரில் செல்போன் டவரில் ஒருவர் தலைகீழாக தொங்கிக்கொண்டிருப்பதும், அவர் முகத்திலிருந்து கண்ணாடி கீழே விழுவதையும் பார்க்கமுடிகிறது.

    அக்‌ஷய்குமார்

    அக்‌ஷய்குமார்

    இப்படி மனிதர்களுக்கு எதிராக கிளம்பும் பறவைகளின் அசாத்திய சக்தியை எப்படி சிட்டியைக் கொண்டு முறியடித்து மனித இனம் அழியாமல் ரஜினிகாந்த் காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை எனக் கூறப்படுகிறது. பொதுவாக ஏழரைச் சனி மனிதர்களுக்கு சங்கடத்தைக் கொடுக்கும் என ஜோசியம் கூறுகிறது. சனீஸ்வரனின் வாகனம் காகம் என புராணங்களில் உள்ளது. அதனால் மனித இனத்திற்கே எழரை கொடுக்க பறவை மனிதனாக அவதாரம் எடுக்கும் வில்லன் அக்‌ஷய்குமாரும் க்ரோவ் மேன் ரூபத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    English summary
    2.0 movie story has been leaked.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X