2.0 திரைப்படம்.. விநாயகர் சதுர்த்திக்கு திட்டம் தீட்டும் ஷங்கர்..!
சென்னை: எந்திரன் 2.0 படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும் என கூறப்படுகிறது.
இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் எந்திரன் 2.0. லைக்கா புரொடக்ஷன்ஸ் 500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இப்போது படத்தில் கிராபிக்ஸ் வேலைகள் நடைபெற்று வருகிறது.

இதில் எமி ஜாக்சன், அக்ஷை குமார், சுதான்சு பாண்டே, அடில் ஹுசைன் மற்றும் பலர் நடித்துள்ளனர். கிராபிக்ஸ், திரைக்கதை, ஆக்ஷன் என பல விஷயங்களில் எந்திரன் திரைப்படம் பாராட்டப்பட்டது. எந்திரன் திரைப்படத்தின் அனுபவத்தை விட மூன்று மடங்கு அதிகமாக ரசிகர்களை கவர வேண்டும் என்பதில் ஷங்கர் மிகக் கவனமாக இருக்கிறார்.
இப்படத்தினுடைய டீசரை விநாயகர் சதுர்த்தி நாளான செப்டெம்பர் 13ஆம் தேதி வெளியிட இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
கிராபிக்ஸ் வேலைகளால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது. நவம்பர் மாதம் 29ஆம் தேதி படம் ரிலிஸ் ஆக உள்ளது. ஏஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











