பாகுபலி கொஞ்சம் ஓரமா போய் நில்லுங்க, சிட்டி வருது #2Point0Teaser
சென்னை: 2.0 டீஸரை பார்த்தவர்களால் கிராபிக்ஸ் பணிகளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது. டீஸரில் கிராபிக்ஸை வைத்து மிரட்டியிருக்கிறார்கள்.
ஹாலிவுட் படம் பார்த்த எஃபெக்ட் வருகிறது. டீஸரை பார்த்தவர்கள் அது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.
செலவு
VFX செலவே 530 கோடின்னு சொன்னானுங்க, அதுக்கப்புறம் ரஜினி, அக்ஷய் குமார், ஷங்கர், ரஹ்மான் சம்பளம் ப்ளஸ் ப்ரொடக்ஷன் செலவுலாம் கூட்டுனா பட்ஜெட் 600 கோடி வரை போகும்ல. இந்த படம்லாம் தோக்க கூடாது. அப்றம் எவனும் எடுக்க முன்வர மாட்டானுங்க #2Point0Teaser
சிட்டி
சிம்பிளாக சொல்லணும்னா... டியர் அமரேந்திர பாகுபலி...எங்க சிட்டி வந்துக்கிட்டிருக்கு..#2Point0Teaser
ரஹ்மான்
ஆஸ்கர் விருது வென்ற ரசூல் சார் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி சிறப்பு. #2Point0Teaser கிளாஸ் மற்றும் ஜீனியஸ். படம் பார்க்க ஆவலாக உள்ளது.
டீஸர்
சிறப்பான டீஸர்
உலகத் தரம் வாய்ந்த விஎஃப்எக்ஸ்
அனைத்து பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளையும் முறியடிக்கும் என்று தெரிகிறது
#2Point0Teaser
லைகா
சங்கர் சம்முகம்: கடசியா ஊ ஊஊஊனாரே! அது கூட உங்களப்பாத்துத்தான் @LycaProductions
ஏன்
ஏன் லீக்கான அதே டீஸரை வெளியிட்டுள்ளீர்கள்?


Click it and Unblock the Notifications











