twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு ஹீரோ, ஒரு வில்லன், ரெண்டு ரோபோ: இதுதான் 2.0 டீசர்

    |

    சென்னை: 2.0 திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

    நீங்க வாட்சப்ல டிபி மாத்தும்போது... ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணும்போது.. உங்க பாய் ஃப்ரெண்ட் அல்லது கேர்ள் ஃப்ரெண்ட்கிட்ட பேசிகிட்டு இருக்கும்போது.. அல்லது அவசரத்துக்கு ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணும்போது.. ஏதோ ஒரு காந்த சக்தி உங்க மொபைல் போன சடக்குன்னு உருவிகிட்டு போனா உங்களுக்கு எப்படி இருக்கும்..? அதுதான் 2.0 பட டீசர்ல நடக்குது.

    2.0 Teaser is mind blowing

    ஏற்கனவே அறிவித்தபடி 9 மணிக்கு 2.0 படத்தோட டீசரை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டிருக்கிறார். டீசரின் ஆரம்பத்தில் பறவைகள் செல்போன் டவரை சுற்றி பறக்கின்றன. பிறகு ஒவ்வொருவருடைய செல்போன்களும் மாயமாகுது. இது உலகம் முழுக்க நடப்பதாக டிவியில் செய்தி வருகிறது

    உடனே உயர்மட்டக்குழுவில் இருப்பவர்கள் இது என்ன? இதுக்கு என்ன காரணம் என்று கேட்கும்போது..? எமி ஜாக்சன் பக்கத்துல உக்காந்து இருக்க டாக்டர் வசீகரன் இது அறிவியலுக்கும் அப்பாற்பட்டது. அதை எதிர்த்து நிற்க ஒரு சூப்பர் பவர் வேணும் என சொல்கிறார்.

    அப்போ என்ன பண்ணாலாம்ங்குறீங்கன்னு கேட்ட உடனே... "சிட்டி த ரோபாட்" என வசீகரன் ரஜினி சொன்னதும், சிட்டி ரோபோவின் என்ட்ரி... க்ரோவ் மனிதனாக பில்டிங்கை உடைத்து அச்சுறுத்தும் அக்ஷய் குமாரின் நிழல் பூமியில் படும்போது அதை அப்படியே அன்னாந்து பார்த்துக்கொண்டு சிட்டி ரோபோ ஆக்‌ஷனில் இறங்குகிறார்.

    இறுதியில் கால்பந்தாட்ட மைதானத்துக்குள் பல்லாயிரக்கணக்கான ரோபோக்கள் வரும்போது, தீபாவளி ஸ்டைல் என்று எந்திரனில் ரோபோ பல துப்பாக்கிக்களை கையில் ஏந்தி சுடும் அதே காட்சி ரிப்பீட் ஆகிறது. அக்ஷய் குமார் வந்து ரிமோட்டை அழுத்தியதும் டம்முன்னு ஒரு வண்டி வெடிச்சு செதறுது.

    சட்டென்று பார்க்கும்போது, அக்ஷயம் குமார் இப்படத்தில் காந்த சக்தியை வைத்து செல்போன் திருடும் மிகப்பெரிய திருடனா இருப்பாரோ என்று சந்தேகம் வருகிறது.

    உலகத்தை தன்னுடைய அசாத்திய சக்தியை வைத்து கட்டுப்படுத்த நினைக்கும் வில்லன். அதனால் ஏற்படும் அழிவுகள். மனிதனால் அதை தடுக்க முடியாது என்பதால் சூப்பர் பவர் கொண்ட சிட்டி ரோபோ அந்த திட்டத்தை முறியடித்து எப்படி உலகை அழிவிலிருந்து காப்பாற்றுகிறது என்பது தான் கதை என்று தெளிவாகத் தெரிகிறது. எந்திரன் போலவே இப்படத்திலும் நல்லது செய்யும், கெட்டது செய்யும் ரோபோக்கள் உள்ளன.

    எந்திரனின் டேனி டென்ஸோங்பா புரஃபசர் போஹ்ராவாக நடித்திருப்பார். அவரிடம் ஸ்பெஷலான சக்திகள் எதுவும் இருக்காது. 2.0 வில் அதே இடத்தில் அக்‌ஷய்குமார் நடித்திருக்கிறார். கூடுதலாக பல சிறப்பு சக்திகள் அவரிடம் உள்ளன. அவ்வளவுதான் வித்தியாசம்.

    இதுதான் கதை என நம்மால் யூகிக்க முடிந்தாலும், காட்சிக்கு காட்சி எதிர்பார்ப்பைக் கூட்டும் வகையில் பல சுவாராஸ்யமான விஷயங்களை ஷங்கர் வைத்திருப்பார் என நம்பலாம்.

    English summary
    The most awaited 2.0 teaser is out.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X