அம்மாக்களின் வயித்தெரிச்சல் தான் 2.0 படமாக வந்துள்ளது: எப்படி தெரியுமா?

By Siva

சென்னை: தாய்மார்களின் வயித்தெரிச்சல் தான் 2.0 படமாக வந்துள்ளது.

2.0 பட டீஸர் இன்று காலை வெளியானது. டீஸரில் அனைவரின் செல்போனும் மாயமாவது போன்று காட்டியுள்ளார்கள். வில்லன் அக்ஷய் குமார் செல்போன் திருடனா என்ற கேள்வி எழுகிறது.

டீஸரை பார்த்து யார் சந்தோஷப்பட்டார்களோ இல்லையோ அம்மாமார்கள் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள்.

பிள்ளைகள்

செல்போன் பயன்படுத்தாத ஆட்கள் மிக மிகக் குறைவு. யாரைப் பார்த்தாலும் செல்போனும் கையுமாக உள்ளார்கள். அதிலும் இந்த இளசுகள் காலையில் எழுந்ததில் இரு்நது தூங்கச் செல்லும் வரை செல்போனை நோண்டிக் கொண்டே இருக்கிறார்கள். தலையணைக்கு அடியில் செல்போனை வைத்துக் கொண்டு தூங்குகிறார்கள். சாப்பிடும்போது கூட அந்த செல்போனை கீழே வைப்பது இல்லை. இதை பார்க்கும் அம்மாக்கள் குமுறிக் கொண்டிருப்பது அனைத்து வீடுகளில் நடக்கும் சாதாரண விஷயம்.

2.0

2.0

2.0 பட டீஸரில் செல்போன்கள் எல்லாம் மாயமாவதை பார்த்த அம்மாக்கள் குஷியாகி சூப்பரப்பு என்றார்கள். நிஜத்திலும் இதே போன்று நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏக்கப் பெருமூச்சு வேறு விட்டுள்ளனர். அம்மா, அது ஷங்கர் செய்த கிராபிக்ஸுமா. நிஜத்தில் அப்படி எல்லாம் நடக்காது என்று விளக்கம் அளித்த பிள்ளைகளின் பேச்சு அவர்களின் காதில் ஏறவே இல்லை. ரஜினி ரசிகர்களை விட இந்த அம்மாமார்கள் தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அம்மா

2.0 டீஸரை பார்த்த அம்மாக்களின் மனநிலையை வைத்து அதற்குள் மீம்ஸ் போட்டுவிட்டார்கள்.

கொழுக்கட்டை

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல். ஆவணி வெயிலில் அவித்து எடுத்த கொழுக்கட்டை. புஜூக் புஜூக் #2Point0Teaser. இந்த சிட்டியை பார்த்தால் கொழுக்கட்டை ஃபீல் தான் பலருக்கும் வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X