தமிழைவிட இந்தியில் வைரலான 2.0 டீசர்: காரணம் என்ன?

சென்னை: 2.0 டீசர் தமிழை விட இந்தியில் அதிக பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

"என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களே" இது ரஜினி மேடையில் பேசத்துவங்கும்போது தமிழர்களை வணங்கும் முறை. தன் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவா? எனப் பாடிய ரஜினிக்கு இம்முறை தமிழ் கைகொடுக்க வில்லையோ எனத் தோன்றுகிறது.

அறிவிக்கப்பட்டபடி 2.0 டீசர் இன்று காலை 9 மணிக்கு, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியானது. அக்ஷய்குமாரின் மிரட்டும் வில்லத்தனம், சிட்டி ரோபோ களத்தில் இறங்கி உலகத்தைக் காப்பாற்ற போராடுவது, கிராபிக்ஸ் வேலைகள் என பல வகைகளில் பாரட்டுக்களைப் பெற்றுள்ளது.

தமிழ் நடிகர்

தமிழ் நடிகர்

கதை என்னவென்று யூகிக்க முடிந்தாலும், திரைக்கதை யுக்தி, விருவிருப்பு, சஸ்பென்ஸ், பிரம்மாண்ட சிந்தனை மற்றும் காட்சி அமைப்புகளால் படம் நம்மை மகிழ்விக்கும் என நம்பப்படுகிறது. ஆனால், இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்ற மாஸ் அந்தஸ்து இருக்கக்கூடிய ஒரு தமிழ் நடிகரின் டீசர் தமிழகத்தை விட இந்தி மொழி பேசுபவர்கள் மத்தியில் அதிகமாக பார்க்கப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. பாலிவுட் சினிமாக்களில் மார்கெட் இருக்கும் நடிகர்களை ஒன்றிணைத்து படமெடுத்து ஹிட் அடிப்பார்கள்.

தயாரிப்பாளர்கள்

தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமாவில் அந்த நிலை வருவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும் என்றாலும், பிற மொழி நடிகர்களை நடிக்க வைத்து மற்ற மாநிலங்களில் வசூல் வேட்டை நடத்தும் யுக்தியை தயாரிப்பாளர்கள் கற்றுகொண்டு விட்டார்கள்.

தமிழ் டீசர்

தமிழ் டீசர்

என்னதான் ரஜினிகாந்த் உலக அளவிலான சூப்பர்ஸ்டாராக இருந்தாலும், அவரை வளர்த்த, வாழவைத்த மண்ணின் மைந்தர்களைவிட மற்ற மாநிலத்தவர்கள் பாசம் வைப்பார்களா என்பது சந்தேகம் தான். 2.0 டீசர் முடிவுகளைப் பார்க்கும்போது ரஜினிக்கு தமிழைவிட இந்தியில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்களோ என கேள்வி எழுந்தாலும், அதற்கு அக்ஷய் குமார் என்ற நடிகரே காரணம் என்பதை மறுக்க முடியாது. வெளியான இரண்டரை மணி நேரத்தில் தமிழில் இரண்டரை லட்சம் பார்வையாளர்களைப் பெற்ற டீசர், இந்தியில் ஐந்து லட்சத்தை நெருங்குகிறது. தெலுங்கிலும் தமிழைவிட அதிக பார்வையாளர்களைக் கொண்டுள்ளது. தமிழைவிட இந்தியில் இரண்டு மடங்கு அதிகமாக பார்க்கப்படுகிறது.

ரஜினி அரசியல்

ரஜினி அரசியல்

கமர்ஷியல் மாஸ் படங்கள் , சமூக அக்கறைக் கொண்ட படங்கள் என எல்லா தளங்களிலுமே முத்திரைபதிக்கும் நடிகராக வலம் வந்து அதிகப்படியான ரசிகர்களைக் கொண்டிருக்கிறார் அக்‌ஷய். அவர் வில்லனாக நடித்திருக்கும் 2.0 டீசர் தமிழை விட இந்தியில் அதிகம் விரும்பப்படுவதற்கு அது ஒரு காரணமாக இருந்தாலும், தேசிய அளவில் அதிகமாகப் பேசப்படும் மொழி இந்தி. ரஜினியின் பிற மொழி ரசிகர்கள் இந்தியில் பார்த்ததால் கூட இப்படி முடிவு வந்திருக்கலாம். ஆனால், ரஜினியை வளர்த்துவிட்ட மண்ணில் ஏழுகோடிக்கும் மேல் தமிழர்கள் இருக்கும்போது, இரண்டரை லட்சம் என்பது பின்னடைவுதான். இதற்கு எட்டுவழிச்சலை திட்டம், போராட்டங்கள் குறித்து தமிழகத்தில் ரஜினி எடுக்கும் அரசியல் நிலைப்பாடுகளும்கூட காரணமாக இருக்கலாம். ரசிகர்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தியிருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X