நவம்பர் 3ல் 2.0 ட்ரெய்லர் வெளியீடு: ஒரேயொரு பிட்டை போட்டு ஆவலை தூண்டிய ஷங்கர்
சென்னை: 2.0 படத்தின் ட்ரெய்லர் வரும் நவம்பர் மாதம் 3ம் தேதி வெளியாகும் என்று இயக்குனர் ஷங்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படம் அடுத்த மாதம் 29ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் நவம்பர் மாதம் 3ம் தேதி வெளியாகும் என்று ட்வீட்டியுள்ளார் ஷங்கர்.
அந்த ட்வீட்டை பார்த்த ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஷங்கர்
ட்ரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பில் அக்ஷய் குமார் பறவை அவதாரம் எடுத்ததன் கை உள்ளது. அதற்கு பதில் ரஜினியின் புகைப்படம் வைத்திருந்தால் நன்றாக இருக்கும் என்பது தலைவர் ரசிகர்களின் கருத்து.
என்ன
அது என்ன 5வது விசை என்று ஷங்கரிடம் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
2.0
ஷங்கர் குறிப்பிட்டுள்ள 5வது விசை என்னவென்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். #2Point0TrailerOnNov3
டிரெண்ட்
2.0 ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











