செல்போன் வச்சிருக்கும் ஒவ்வொருத்தனும் கொலைகாரனுங்க: மிரட்டும் 2.0 ட்ரெய்லர்
Recommended Video

சென்னை: 2.0 படத்தின் ட்ரெய்லர் இன்று சத்யம் தியேட்டரில் வெளியிடப்பட்டது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படம் வரும் 29ம் தேதி பிரமாண்டாக ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது.

1 நிமிடம் 59 வினாடிகள் ஓடும் ட்ரெய்லரில் ரஜினி வந்து ஐ ஆம் சிட்டி, ரீ லோடட், வெர்ஷன் 2.0 என்று கூறுகிறார். செல்போன் வச்சிருக்கும் ஒவ்வொருத்தனும் கொலைகாரனுங்க என்று அக்ஷய் குமார் கூறும் வசனம் பவர்ஃபுல்லாக உள்ளது.
படத்தில் ரஜினிக்கு இணையாக அக்ஷய் குமார் கதாபாத்திரம் உள்ளது என்பது ட்ரெய்லரில் தெரிகிறது. ட்ரெய்லரை பற்றி ஒரே வார்த்தையில் கூறுவது என்றால் பிரமாண்டம்.
ட்ரெய்லர் வெளியீட்டை சென்னை சத்யம் சினிமாஸில் பிரமாண்டமாக நடத்தினார்கள். தியேட்டர் வாயிலில் சிட்டி பொம்மைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. சிவப்பு கம்பளம், 2.0 பேனர்கள் என்று தயாரிப்பு நிறுவனமான லைகா ஜமாய்த்துவிட்டது.


Click it and Unblock the Notifications











