அதிமுகவில் சேர்ந்த நடிகர் பொன்னம்பலம், பாடகர் சிலோன் மனோகர்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் நேற்று 9000 பேர் அதிமுகவில் இணைந்தனர். இவர்களில் முக்கியமானவர்கள் நடிகர் பொன்னம்பலம், சிலோன் மனோகர், திரைப்பட எடிட்டர் அனில் மல்நாட், முன்னாள் தமிழக அரசு கள விளம்பரத்துறை இயக்குநர் இளங்கோ, சூரியக் கதிர் பத்திரிக்கை ஆசிரியர் கதிர்வேல் ஆகியோர்.
சிலோன் மனோகருக்கு இன்னொரு பெயர் சுராங்கனி மனோகர். இவர் அந்தக் காலத்தில் பாடிய சுராங்கனி சுராங்கனி என்ற பப்பிசைப் பாடல், இலங்கையில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் பெரும் பிரபலமானது என்பது நினைவிருக்கலாம். இவர் தமிழ், ஈழத் தமிழ் மற்றும் இந்தி் படங்களில் நடித்துள்ளார்.
இவர்கள் தவிர ஏராளமான மாணவர்களும் அதிமுகவில் இணைந்தனர். அனைவரையும் வரவேற்று பேசிய ஜெயலலிதா, வருகிற சட்டசபைத் தேர்தலில் திமுக ஆட்சியின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டிய பொறுப்பு உங்களிடம் உள்ளது. அதை சரி வர செய்யப் பாடுபடுங்கள்.
ஒவ்வொருவரும் பத்து பேரை வாக்குச் சாவடிக்குச் சென்று ஓட்டளிக்க வகைசெய்ய வேண்டும் என்றார் ஜெயலலிதா.
பாண்டியனின் தங்கைக்கு நிதியுதவி
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சமீபத்தில் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்ட நாகை மாவட்ட மீனவர் வீர பாண்டியனின் சகோதரி ரேவதிக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவியையும் அளித்தார் ஜெயலலிதா. அப்போது ரேவதி அழவே, அவரது கண்ணீரைத் துடைத்து கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார்.


Click it and Unblock the Notifications