twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2 விருதுகளை வென்ற மூடர் குறும்படம் ...பிரபலங்கள் வாழ்த்து !

    |

    சென்னை: ஒரு வைரஸ் கிருமியை உருவாக்கி மக்களிடம் செலுத்தி மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கி மருத்துவ வியாபாரத்தைப் பெருக்குவது எப்படி என்று சொல்கிற குறும்படம் தான் 'மூடர்'.

    கொரோனா போன்ற வைரஸ் கிருமி பற்றிய கதையாக ஓராண்டுக்கு முன்பே உருவான இக்குறும்படம், அண்மையில் தான் வெளியானது. ஆன்லைன் ஊடகங்கள் பலர் இப்படத்தை பாராட்டுகின்றன. இப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இக்குறும்படத்திற்கு பெங்களூரில் AISC விருதுகள் கிடைத்துள்ளன.

    சிறந்த இயக்குநருக்காகவும் சிறந்த வசனகர்த்தாவுக்காகவும் என இரண்டு விருதுகள் பெற்றுள்ளன. இப்படத்தை இயக்கி இருப்பவர் தாமோதரன் செல்வகுமார்.முதல் முயற்சி வெற்றி பெற்றால் எல்லோருக்கும் ஆனந்தம் தான் , அந்த மன நிலையில் தாமோதரன் மிகவும் சந்தோஷத்துடன் தனது குழுவை பாராட்டி வருகிறார்.

    பல ஹீரோக்கள் என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.. நடிகை கங்கனா ரனாவத் பரபரப்பு!பல ஹீரோக்கள் என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.. நடிகை கங்கனா ரனாவத் பரபரப்பு!

    சின்னத்திரை மூலம்

    சின்னத்திரை மூலம்

    இப்படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் சின்னத்திரையிலும் பெரிய திரையிலும் பிரபலமானவர்கள். விஜய் டிவி 'ராஜாராணி' புகழ் கார்த்திக் சசிதரன், சன் டிவி 'பாண்டவர் இல்லம்' புகழ் ஆர்த்தி சுபாஷ் , 'கல்லூரி' படத்தில் நடித்த மதன் கோபால் ,'உறியடி2 ' சசி குமார், பிர்லா போஸ், அனிஷா சக்தி முருகன், வினோத் லோகிதாஸ், சிவகுமார் ராஜு ஆகியோர் நடித்துள்ளார்கள்.

    அனுபவங்களை பகிர்ந்து

    அனுபவங்களை பகிர்ந்து

    ஒளிப்பதிவு-கலை சக்தி ,இசை ஜே.சி.ஜோ,எடிட்டிங்- எம்.கே. விக்கி மேற்கொண்டு உள்ளனர் . இக்குறும்படத்தை பல்லவாஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. படம் பற்றி இயக்குநர் தாமோதரன் செல்வகுமார் பல ஸ்வாரஸ்யமான் அனுபவங்களை பகிர்ந்து உள்ளார்

    ஆத்மார்த்தமாக

    ஆத்மார்த்தமாக

    "நான் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லை. சினிமா மீது உள்ள காதலால் ஏழு ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு 'மூடர் ' குறும்படத்தை எடுத்து இருக்கிறேன். என்னை நம்பி முதலீடு செய்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இதற்கு முன்பும் சில குறும்படங்கள் எடுத்து இருந்தாலும் இதில் ஒரு திரைப்படத்திற்கான முன் முயற்சியாக முழு உழைப்பைப் போட்டிருக்கிறோம். இது தான் முதல் குறும்படம் முழுவதுமாக ஆத்மார்த்தமாக எடுத்த முயற்சி. அடுத்து ஒரு திரைப்பட முயற்சியில் இறங்கி இருக்கிறோம். ஓடிடியில் வெளியிடும் வகையில் அப்படம் உருவாக இருக்கிறது" என்கிறார்

    மக்கள் அங்கீகாரம் கிடைக்கும்

    மக்கள் அங்கீகாரம் கிடைக்கும்

    குறும்படம் மூலம் நல்ல கதைகளும் நல்ல விஷயங்கலும் சொல்ல தான் படுகிறது. ஆனால் மக்கள் அதை தேர்ந்து எடுத்து பார்க்க நேரம் ஒதுக்க வேண்டும். இன்றைய காலத்தின் ஓட்டத்தில் நெகடிவான கருத்துக்கள் அதிகம் பரப்பப்பட்டு மிக எளிதாக மக்களை சென்று அடைகிறது. அந்த போட்டியில் நல்ல குறும்படங்கள், எளிமையான நல்ல திரைக்கதை கொண்ட படைப்புகள் ஒதுக்கப்படுகின்றன. சிறந்த இயக்குநருக்காகவும் சிறந்த வசனகர்த்தாவுக்காகவும் என இரண்டு விருதுகள் பெட்ரா இந்த படத்தை மக்கள் அங்கீகாரம் கொடுப்பார்கள் என்று நம்புவோம்.

      English summary
      2 Award Winning Shorts Film 'Mooder'
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X