பொன்மகள் வந்தாள்…2 கோடிப் பார்வையாளர்கள்.. ஏகோபித்த வரவேற்பை பெற்ற டிரைலர் !
சென்னை : தமிழ் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தின் டிரைலரை இதுவரை 2 கோடி பேர் பார்த்துள்ளனர். இப்படம் அமேசான் பிரைமில் நாளை வெளியாக உள்ளது.
Recommended Video
ஸ்ட்ரீமிங் தளங்களில் பல முதல் முயற்சிகளை முன்னெடுத்து வரும் அமேசான் பிரைம், அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் 'பொன்மகள் வந்தாள்' தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரை பிரம்மாண்டமான முறையில் வெளியிட்டுள்ளது. தென்னிந்திய சந்தையில் இருக்கும் எண்ணற்ற ரசிகர்களிடம் சென்று சேர, தமிழ் சினிமாவின் முதல் ஸ்ட்ரீமிங் வெளியீடாக வெளிவரவுள்ள இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் 21 மே, இரவு 8.43 மணிக்கு, 31 தொலைக்காட்சி சேனல்களில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பானது.
இதுவரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ட்ரெய்லர் விளம்பரங்களில் மிகப்பிரம்மாண்டமான விளம்பரமாக நாள் ஒன்றுக்கு பல முறை ஒளிபரப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில், ஒரே நேரத்தில், கிட்டத்தட்ட 1.4 கோடி மக்களை இந்த ட்ரெய்லர் சென்று சேர்ந்துள்ளது. தென்னிந்தியாவில் பிரபலமான, முக்கிய நடிகைகளில் ஒருவரான ஜோதிகா நடித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் அனைத்து முக்கிய தொலைக்காட்சி சேனல்களிலும் ஒளிபரப்பானது. இதோடு சேர்த்து, 'பொன்மகள் வந்தாள்' படத்தின் ட்ரெய்லருக்கு, அமேசான் பிரைம் வீடியோவின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்திலும் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. இந்த ட்ரைலரை இதுவரை 2 கோடிப் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

நேர்மையான வழக்கறிஞர்
டி ஆர் பி ரேடிங் என்றால் பார்க் நிறுவனம் வெளியிடும் ரீசல்ட்ஸ் மிகவும் பிரபலம். சராசரி பார்வையாளர்கள் என்னைக்கு அதிகம் உள்ளது இந்த படத்தின் ட்ரைலருக்கு என்பது தான் கூடுதல் தகவல். நேர்மையான வழக்கறிஞர் ஒருவர், தவறாக குற்றம்சாட்டப்பட்ட ஒரு அப்பாவிப் பெண்ணை விடுவிக்கும் முயற்சிகளைப் பற்றி பரபரப்பான நீதிமன்ற விசாரணைக் கதைதான் 'பொன்மகள் வந்தாள்' ஊட்டியில் வசிக்கும் பெட்டிஷன் பெத்துராஜ் என்பவர், 2004-ஆம் ஆண்டு நடந்த தொடர் கொலைகளில் சம்பந்தப்பட்ட, ஆள் கடத்தல், கொலைக்காக தண்டனை அளிக்கப்பட்ட சைக்கோ ஜோதி என்பவரின் வழக்கை மீண்டும் விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதைச் சுற்றி நடக்கும் விறுவிறுப்பான கதை தான் பொன்மகள் வந்தாள்.

சட்டத்தில் ஓட்டைகள்
மகள் வெண்பா ஒரு தீவிரமான வழக்கறிஞர். உண்மையை வெளியே கொண்டு வர சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை தேடிப் பிடித்து சரி செய்கிறார். மேற்பரப்பில் பார்க்கும் எதுவும் கண்ணை ஏமாற்றும் ஒரு மோசமானப் புதிராக இந்த வழக்கு விரிகிறது. பெயருக்காகவும், புகழுக்காகவும் ஆசைப்படுவதாக அவதூறுகளைச் சந்திக்கும் வெண்பா, தன்னை நோக்கி வரும் சவால்களைத் தாண்டி நீதியை நிலைநாட்ட அசராது நிற்கிறார்.

முன்னணி நடிகர்கள்
2டி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில், ஜோதிகா, பார்த்திபன், கே பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன் என அட்டகாசமான நடிகர்கள் நிறைந்துள்ளனர். 200-க்கும் அதிகமான நாடுகளில், பிரத்யேகமாக ப்ரைம் உறுப்பினர்களுக்கு, மே 29-ஆம் தேதி முதல் 'பொன்மகள் வந்தாள்' ஸ்ட்ரீமிங்கில் காணக்கிடைக்கும்.

பெண்களை மையப்படுத்திய படம்
தியேட்டர் உரிமையாளர்களின் எதிர்ப்பையும் மீறி பொன்மகள் வந்தாள் படம் ஆன்லைனில் வெளியாக உள்ளது. கொரோனாவால் மட்டுமே இந்த படம் ஒடிடியில் வெளியிடுவதாகவும், தியேட்டரில் வெளியிட்டு இருந்தால் நிச்சயம் கொண்டாட்டமாக இருந்து இருக்கும் எனறும் ஜோதிகா கூறினார். மேலும், பெண்களை மையப்படுத்திய எடுக்கப்படும் படங்களுக்கு தியேட்டரில் கூட்டம் குறைவாகத்தான் வரும் என்பதை மனதில் வைத்தே இப்படம் அமேசானில் வெளியிடுவதாகவும் நடிகை ஜோதிகா சில நாட்களுக்கு முன் கூறி இருந்தார்.

அமேசானில் பல உறுப்பினர்கள்
இது வரை அமேசான் பிரைமை பயன்படுத்தாத பலர் இந்த லாக் டவுன் சமயத்தில் இதில் உறுப்பினராகி புதிய படங்களை உடனுக்கு உடன் பார்ப்பதற்காக பணம் கட்டி வருகிறார்கள் என்பது சிறப்பு செய்தியாக அமேசான் கருதுகிறது. நிறைய படங்கள் வருகையால் வீட்டில் இருந்தபடியே பல பிரபலமான படங்கள் அமேசானில் வெளிவருகிறது. தெலுங்கு சினிமாவிலும் ரன் எனும் படம் முதல் முறையாக "ஆஹா"" எனும் ஒடிடி மூலம் வெளியாகிறது. அனைத்துப்படங்களையும் ஆவலுடன் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications