நடிகர் செந்தில் கூட்டத்தில் கல்வீச்சு-2 சிறுமிகள் படுகாயம்

அருப்புக்கோட்டையில் அதிமுக சார்பில் வைகைச் செல்வன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நடிகர் செந்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,
அடிக்கடி மின் தடை, விலைவாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் ஊழல். இவர்களுக்கா உங்கள் ஓட்டு. சிந்தித்து நல்லவர்களுக்கு வாக்களியுங்கள். சொல்வதை செய்வோம். செய்வதை சொல்வோம் என்கின்றனர்.
சொல்லாத எதை செய்தனர்? மின்தடை, பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வு இதுதான் சொல்லாமல் செய்தது என்று பேசினார்.
அப்போது திடீரென சிலர் செந்தில் மீது கல்வீசினர். இதில் அவருக்கு காயம் ஏற்படவில்லை. ஆனால் கூட்டத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 11 வயது மற்றும் 7 வயதுடைய இரு சிறுமிகளுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Comments


Click it and Unblock the Notifications