வாக்காளர்களை சபித்து பேச்சு-நடிகை குஷ்பு மீது கர்நாடகா அதிமுக வழக்கு

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவு குறித்து கருத்து நடிகை குஷ்பு கருத்து தெரிவிக்கையில், இது தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல, மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி. இதற்காக மக்கள் கஷ்டப்படுவார்கள் என்று கருத்து கூறியிருந்தார்.
நடிகை குஷ்புவின் இந்த பேச்சு வாக்குரிமைக்கு எதிரானது எனக் கூறி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கர்நாடக மாநில அ.இ.அ.தி.மு.க. செயலாளர் புகழேந்தி இன்று அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கு விசாரணை வரும் ஜூன் 16 ம் தேதி நீதிபதி கிள்ளிவளவன் முன்பு விசாரணைக்கு வருகிறது.
நடைபெற்ற சட்ட மனறத் தேர்தலில் நடிகை குஷ்பு திமுகவிற்கு ஆதரவாக பட்டி தொட்டி எங்கும் சென்றும் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடதக்கது.
Comments


Click it and Unblock the Notifications