சிவா மாமாவுக்காக க்யூட்டாக பாட்டு பாடிய 'வாயாடி': அசந்து போன சிவகார்த்திகேயன்
Recommended Video

சென்னை: கனா படத்தில் வரும் வாயாடி பெத்தப்புள்ள பாடலை ஒரு குட்டி அழகாக பாடிய வீடியோவை பார்த்து அசந்து போயுள்ளார் சிவகார்த்திகேயன்.
குட்டீஸ்களின் விருப்ப நடிகராகிவிட்டவர் சிவகார்த்திகேயன். ரஜினி, விஜய்யை அடுத்து சிவகார்த்திகேயனும் குட்டீஸ்களின் செல்ல மாமா ஆகிவிட்டார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா படத்தில் வரும் வாயாடி பெத்தப்புள்ள பாடலை ஒரு குட்டிப்பிள்ளை அழகாக பாடிய வீடியோவை ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அந்த குட்டிப்பிள்ளை பாட, அண்ணன் வாயால் மியூசிக் போடுகிறார். சிவா மாமா இந்த பாட்டு உங்களுக்கு தான் என்று அந்த பொடியன் கூறிய வீடியோவை சிவகார்த்திகேயன் பார்த்துள்ளார். படத்தில் தன் மகள் ஆராத்யாவுடன் சேர்ந்து தான் பாடிய பாடலை அந்த குட்டி பாடியதை பார்த்த சிவா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ரெண்டு பேரும் சூப்பர். இந்த க்யூட் வீடியோவுக்காக இந்த குழந்தைகளுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
ஆராத்யாவும், சிவகார்த்திகேயனும் சேர்ந்து பாட்டு பாடிய வீடியோ ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











