கோலிவுட் - சுதந்திர தின ஸ்பெஷலாக வரும் ஆதலால் காதல் செய்வீர்!

By Shankar

சென்னை: சுந்திர தின ஸ்பெஷலாக இந்த முறை இரண்டு தமிழ்ப் படங்கள் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகின்றன.

அதே நேரம் அன்று வெளியாகவிருந்த இரு படங்கள் வேறு தேதிக்குத் தள்ளிப் போயிருக்கின்றன.

விஜய்யின் தலைவா வெளியாகுமா என்று தெரியவில்லை.

சுதந்திர தின ஸ்பெஷலாக வரும் படங்கள் குறித்த ஒரு பார்வை...

ஆதலால் காதல் செய்வீர்

ஆதலால் காதல் செய்வீர்

விக்ரமை வைத்து ராஜபாட்டை என்ற படத்தை எடுத்த சுசீந்திரன், அதன் பிறகு இந்தப் படத்தைத் இயக்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் ரெட்ஜெயன்ட் பேனரில் வரும் இந்தப் படத்தின் மூலம் ராஜபாட்டையில் இழந்த பெயரை சுசீந்திரன் மீட்டெடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தலைவா?

தலைவா?

கடந்த 9-ம் தேதி வெலியாகவிருந்த தலைவா, பல்வேறு காரணங்களால் வெளியாகாத நிலையில், சுதந்திர தினத்தன்று வெளியிட்டுவிட முனைப்பு காட்டி வருகிறார்கள். அதற்குள் அனைத்துப் பிரச்சினைகளும் தீருமா அல்லது ஆகஸ்ட் 23-க்குத் தள்ளிப் போகுமா தெரியவில்லை.

தேசிங்கு ராஜா

தேசிங்கு ராஜா

முதலில் ஆகஸ்ட் 15-ல் வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட எழில் இயக்கிய தேசிங்கு ராஜா, அதிக தியேட்டர்கள் வேண்டும் என்பதற்காக ஆகட் 23-ம் தேதிக்கு தள்ளிப்போகிறது.

பாசமலர்

பாசமலர்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் காலத்தால் அழியாத காவியமான பாச மலர் டிஜிட்டல் வடிவில் வரும் சுதந்திர தினத்தன்று தமிழகமெங்கும் புதிய வடிவில் வெளியாகவிருக்கிறது.

டிவியில்தான் கொண்டாட்டம் அதிகம்

டிவியில்தான் கொண்டாட்டம் அதிகம்

பொதுவாக முன்பெல்லாம் சுதந்திர தினத்துக்கு வெள்ளித்திரையில்தான் அதிகப் படங்கள் வெளியாகும். ஆனால் இப்போது சின்னத்திரையில்தான். இந்த ஆண்டும் சுந்தரபாண்டியன், கடல் போன்ற புதிய படங்கள் சுதந்திர தின ஸ்பெஷலாக தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X