பெயின்ட் விளம்பரத்துக்கு இவ்ளோ பில்டப்பா..? - ஷங்கரை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
துபாய் : '2.ஓ' படத்தின் இசை வெளியீட்டுக்காக துபாயில் படு பயங்கரமாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் விளம்பரத்தோடு நடுவானில் ஸ்கை டைவிங் விளையாட்டும் நடைபெற்றது.
பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் '2.O' படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் பிரமாண்டமாக இன்று நடைபெற இருக்கிறது.
'2.O' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன் நடித்திருக்கிறார். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 400 கோடி ரூபாய் செலவில் லைகா நிறுவனம் 2.O' படத்தை உருவாக்கியிருக்கிறது.
பறக்கும் 2.O கொடி
துபாய் '2.O' இசை வெளியீட்டுக்காக வண்ணமயமாகத் தயாராகி இருக்கிறது. '2.O' விளம்பரம் பத்தாயிரம் அடி உயரத்தில் பறக்கிறது. துபாயின் பாம் ஜுமைராவில் 10000 அடி உயரத்தில் '2.O' விளம்பரத்தோடு ஸ்கை டைவிங் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெயிண்ட் விளம்பரம்
பில்டப்பே குடுக்காம பாகுபலியே அவ்வளோ பிரம்மாண்டமா எடுத்தான்.. வெறும் பெயிண்ட் வௌம்பரத்துக்கு @shankarshanmugh இவ்ளோ பில்டப்பா...
கொளுத்திப் போடு
'2.O' படத்தின் ஸ்கை டைவிங் ப்ரொமோஷனுக்கு 'கொளுத்திப் போடு' மொமென்ட் எப்படிப் பொருந்துது பாருங்க...
இதெல்லாம் சும்மா
இதல்லாம் பார்த்து வாய பொளக்குற கூட்டம் ரொம்ப கம்மி, இன்னும் சில வருஷத்துல அட போடானு போய்ட்டே இருப்பாங்க..
காசு இருந்தா
காசு அதிகமா இருந்தா இப்படித்தான் யோசிக்கத் தோணும்.... 2010-ல இல்ல.. 2200-ல கூட இந்தியா வளர்ச்சி அடையாது!
ஆத்தீ... வடிவேலு
வடிவேலுவை மட்டும் எல்லாம் இடத்துலேயும் ஒட்ட வைக்கலாம் போல #VadiveluForLife
ஓவரு
இதே மாதிரிதான் கபாலிக்கு ஃப்ளைட்ல ஸ்டிக்கர் அடிச்சு ஒட்டுனீங்க. படம் ஃப்ளைட் மாதிரியே பறந்திடுச்சு... இதெல்லாம் ஓவர் ப்ரொமோஷன்!
வீண் விளம்பரம்
சங்கா், உங்கள் உழைப்பின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா...எதற்காக இப்படி வீண் விளம்பரம்..?


Click it and Unblock the Notifications











