»   »  2017 தீபாவளிக்கு ஷங்கர் தரும் விருந்து 2.ஓ!

2017 தீபாவளிக்கு ஷங்கர் தரும் விருந்து 2.ஓ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி ரசிகர்களுக்கு அடுத்தடுத்து தீபாவளி காத்திருக்கிறது. ரசிகர்களைப் பொறுத்தவரை அவர் படம் வெளியாகும் நாள்தான் தீபாவளி, பொங்கல் எல்லாமே...

Select City
Buy Aithe 2.0 (A) Tickets

இந்த ஆண்டு அவரது கபாலி படம் வெளியாகிறது. அடுத்த ஆண்டு தீபாவளி.. ரசிகர்களுக்கு டபுள் தீபாவளியாக அமையப் போகிறது.


2.O comes as Diwali treat

ரஜினி இரு வேடங்களில் நடிக்கும் 2.ஓ படம் 2017 தீபாவளிக்கு வெளியாகப் போவதாக படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.


ரஜினி, எமி ஜாக்ஸன், அக்ஷய் குமார் உள்பட பெரும் நட்சத்திரக் கூட்டம் நடித்துள்ள 2.ஓ படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. ரூ 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை ஷங்கர் இயக்குகிறார்.


இதுவரை சென்னை மற்றும் டெல்லியில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அடுத்து மொராக்கோ மற்றும் பொலிவியா ஆகிய நாடுகளில் இந்தப் படத்தின் பாடல் காட்சிகள் படமாக உள்ளன.


படத்தின் ஷூட்டிங்கை அடுத்த 2017 மே மாதத்துக்குள் முடித்துவிடத் திட்டமிட்டுள்ளார் ஷங்கர். ஷூட்டிங் நடக்கும்போதே கிராபிக்ஸ் மற்றும் ரோபோட்ரானிக்ஸ் பணிகளும் நடப்பதால், சரியாக 2017 தீபாவளிக்கு 2.ஓ படம் வெளியாகிவிடும் என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸில்.


இந்தப் படம்தான் இந்திய சினிமாவில் அதிக பொருட் செலவில் உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது!

English summary
Rajinikath's mega movie 2.O will be releasing for 2017 Diwali day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil