»   »  இவ்ளோ பெரிய தொகைக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்ட ஒரே படம் ரஜினியின் 2.ஓதான்!

இவ்ளோ பெரிய தொகைக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்ட ஒரே படம் ரஜினியின் 2.ஓதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியின் 2.ஓ படம் ரூ 330 கோடிக்கு இன்சூர் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவில் மிகப் பிரமாண்ட படமாக உருவாகிறது ரஜினியின் 2.ஓ. ஷங்கர் இயக்கும் இந்தப் படத்துக்கு ரூ 350 கோடி பட்ஜெட். அதற்கும் மேலே கூட ஆகும் என்கிறார்கள்.


2.O insured for Rs 330 cr

படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. டெல்லி ஜவகர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் படப்பிடிப்புக்காக ரஜினி, இயக்குனர் ஷங்கர் மற்றும் ‘2-ஓ' படக்குழுவினர் டெல்லி சென்று இருக்கிறார்கள். சுமார் ஒரு மாதம் இங்கு படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.


இந்த நிலையில் ரஜினியின் ‘2-ஓ' படம் தமிழ் பட வரலாற்றில் முதன் முறையாக ரூ.330 கோடிக்கு இன்சூரன்சு செய்யப்படுகிறது. நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களில் இந்த படம் இன்சூரன்ஸ் செய்யப்படுகின்றது.


ஏற்கெனவே சில படங்கள் இப்படி இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருந்தாலும், இவ்வளவு பெரிய தொகைக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்ட படம் 2.ஓதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: rajini, ரஜினி
English summary
Rajinikanth's 2.O has insured for a huge sum of Rs 330 cr

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil