எந்திரன் சென்டிமென்ட்... தென் அமெரிக்கா பயணமாகும் ரஜினி - ஷங்கர்!
எந்திரன் படத்தின் இரண்டாம பாகமான 2.ஓ படத்தின் ஷூட்டிங்குக்காக பொலிவியா செல்கிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் முக்கிய காட்சிகள் இந்த நாட்டில்தான் படமாகின்றன.
கபாலி படத்தில் நடித்து வரும் ரஜினி, அத்துடன் ஷங்கர் இயக்கும் பிரமாண்ட 2.ஓ படத்திலும் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் அவர் நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் முக்கியக் காட்சிகள் பொலிவியா நாட்டில் படமாக்கப்பட உள்ளன.

தென் அமெரிக்காவில் உள்ள நாடுகளில் ஒன்று பொலிவியா. இதற்கு முன் ரஜினி நடித்த மெகா ஹிட் படமான எந்திரனின் பாடல் காட்சிகள் இதே தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டீனா நாட்டில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அந்த ராசி மற்றும் பொலிவியாவின் பிரமாதமான லொகேஷன்களுக்காக இங்கு செல்கிறார்கள் ரஜினி - ஷங்கர் குழுவினர்.
Comments


Click it and Unblock the Notifications