»   »  ரசிகர்களுக்கு 2.ஓ குழு இன்று தரும் புதிய விருந்து! #2pointOMakingVideo

ரசிகர்களுக்கு 2.ஓ குழு இன்று தரும் புதிய விருந்து! #2pointOMakingVideo

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரசிகர்களுக்கு 2.0 குழு இன்று தரும் புதிய விருந்து!-வீடியோ

சென்னை: இந்தியாவின் காஸ்ட்லி புரொஜக்ட்டான 2.ஓவின் மேக்கிங் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

ரூ 400 கோடி செலவில் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வரும் படம் 2.ஓ'. ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். எமி ஜாக்சன் நாயகியாக நடிக்கிறார்.

2.O making video from Tomorrow

படத்தின் ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 2.0' படத்தின் வியாபாரம் பிரமிக்க வைக்கும் வகையில் விலை பேசப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் அதிக அரங்குகளில் வெளியாகும் முதல் இந்தியப் படம் எனும் பெருமை இந்தப் படத்துக்குதான் கிடைத்துள்ளது.

சமீபத்தில் இப்படத்தில் இருந்து மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், 3டி-யில் மேக்கிங் வீடியோ ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2.ஓ படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

English summary
The making video of Rajinikanth's 2.O will be released on Saturday evening 6 pm

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil