மீண்டும் தள்ளிப் போகும் 2.ஓ...? என்ன காரணம் தெரியுமா?

By Shankar

சென்னை: இந்தியாவின் மிகப் பிரமாண்டமான படம் எனப்படும் ரஜினிகாந்தின் 2.ஓ மீண்டும் தள்ளிப் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள 2.ஓ இசை வெளியீடு இரு தினங்களுக்கு முன்புதான் மிக கோலாகலமாக துபாயில் நடந்தது.

சினிமா ரசிகர்கள் அனைவருமே வியந்துபோய் அந்த விழா பற்றியும் படம் குறித்தும் இன்னும் பேசிக் கொண்டுள்ளனர்.

பேட்மேன்

பேட்மேன்

இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. 2.ஓ வரும் ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது அந்தத் தேதியில் அக்ஷய் குமார் நடித்த இந்திப் படம் 'பேட்மேன்' (Padman) வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் ஆர் பால்கி மற்றும் ஹீரோ அக்ஷய்குமார் இருவருமே இதனை அறிவித்துள்ளனர்.

படத் தேதியை

படத் தேதியை

அக்ஷய் குமார் 2.ஓ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அவரே இந்தத் தேதியில் தனது இந்திப் படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளதால் நிச்சயம் 2.ஓ வெளியாகாது என்கின்றனர் திரைத் துறையினர்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

சிஜி எனப்படும் கிராபிக்ஸ் பணிகள்தான். பர்ஃபெக்ஷன் விரும்பியான ஷங்கர், ஹாலிவுட் தரத்துக்கு ஒரு படி மேல் இருக்குமாறு 2.ஓ போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை செய்து வருகிறார். இன்னும் கொஞ்சம் அவகாசம் கிடைத்தால் தான் விரும்பிய அளவுக்கு சரியாக செய்துவிடலாம் என்பதால் மேலும் மூன்று மாதங்கள் படத்தைத் தள்ளிப் போடத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

நல்ல வசூல் இருக்கும்

நல்ல வசூல் இருக்கும்

வரும் ஏப்ரலில் படத்தை வெளியிட்டால் உலகெங்கும் மிகப் பெரிய வசூலைப் பார்க்கலாம் என்பதால் படம் தள்ளிப்போவதாகத் தெரிகிறது.

காலா வரணுமே!

காலா வரணுமே!

ஆனால் ரஜினியின் இன்னொரு படமான காலாவை வரும் ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடுவதாகத் திட்டமிட்டிருந்தனர். அந்தப் படம் தள்ளிப் போகுமா அல்லது முன்கூட்டியே வெளியாகுமா என்பது தெரியவில்லை.

அறிவிப்பு இல்லை

அறிவிப்பு இல்லை

ஆனாலும் இன்னும் 2.ஓ தயாரிப்பாளர் லைகாவோ அல்லது இயக்குநர் ஷங்கரோ படம் தள்ளிப் போவது குறித்து அதிகாரப்பூர்வமாக எதையும் கூறவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X