2.ஓ சர்வதேச அளவில் பெரிய வெற்றிப் பெறும்! - துபாய் பிரஸ் மீட்டில் ரஜினிகாந்த்
Recommended Video

2.0 திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா-வீடியோ
சென்னை: 2.ஓ படம் சர்வதேச அளவில் மிகப் பெரிய வெற்றியைப் பெறும். குறிப்பாக உலக அளவில் பேசப்படும் இந்தியப் படமாக இருக்கும் என்று ரஜினிகாந்த் கூறினார்.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ரூ 400 கோடி பட்ஜெட் பிரமாண்ட படமான 2.ஓவின் இசை வெளியீட்டு விழா துபாயில் நாளை நடக்கிறது. இந்த விழாவையொட்டி இன்று சர்வதேச செய்தியாளர்களுடனான சந்திப்பு இன்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே ரஜினி பேசிவிட்டார். அவர் கூறுகையில், "2.ஓ படத்தை உருவாக்க பெரும் சிரத்தை எடுத்த தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இயக்குநர் ஷங்கர் ஆகியோரைப் பாராட்டுகிறேன்.
இந்தப் படம் இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் வெற்றிப் பெறும். சர்வதேச அளவில் பேசப்படும் இந்தியப் படமாக இருக்கும்," என சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
Comments


Click it and Unblock the Notifications