ஜாக்பாட் வசூலில் ”2 ஸ்டேட்ஸ்”: வசூல் ரூ. 40 கோடியை நெருங்கியது
மும்பை: 2014 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தொடக்கமாக அர்ஜுன் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் வெளியான "2 ஸ்டேட்ஸ்" படம் 40 கோடி ரூபாயை வசூலில் குவித்துள்ளது.
ஜாக்பாட் அடித்துள்ள இந்த படத்தை சேத்தன் பகத்தின் அதிகமாக விற்பனையான "2 ஸ்டேட்ஸ்" புத்தகத்தை மையமாக வைத்து எடுத்துள்ளனர்.
இப்படத்தை கரண் ஜோகர் மற்றும் சாஜித் நதியாவாலா தயாரித்துள்ளனர்.

”2 ஸ்டேட்ஸ்” ஜுரம்:
ஐபில் ஜுரத்திற்கு அடுத்ததாக மிகப்பெரிய வெற்றியாக இந்தப் படம் கருத்தப்படுகின்றது.அமெரிக்கா, கனடா என்று உலக அளவில் இப்படம் வசூல் மழையில் நனைந்துள்ளது.

கல்லாப்பெட்டி “ஃபுல்”:
படம் வெளியான முதல் நாள் அன்றே கிட்டத்தட்ட 12 கோடி ரூபாயை கல்லாப் பெட்டியில் நிரப்பியுள்ளது என்று சேத்தன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முதல் படமே வெற்றி:
இந்த படத்தை அபிஷேக் வர்மன் என்ற இளம் இயக்குனர் இயக்கியுள்ளார். வெளிநாடுகளிலும் படம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றது என்று தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்.

2,400 தியேட்டர்கள்:
உலக அளவில் கிட்டத்தட்ட 2,400 திரைஅரங்குகளில் இந்த படம் வெளியாகி உள்ளது.இந்தியாவில் 2,000 திரையரங்குகளிலும், மற்ற 30 நாடுகளில் 350 திரையரங்குகளிலும் இந்த படம் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











