தொடரும் வேட்டை... ரூ 75 கோடியைத் தாண்டியது ‘2 ஸ்டேட்ஸ்’ வசூல்
மும்பை: சேத்தன் பகத்தின் பிரபல நாவலை அடிப்படையாகக் கொண்டு தயாராகியுள்ள '2 ஸ்டேட்ஸ்' படம் ரிலீசாகி இரண்டு வாரங்கள் கூட முடிவடையாத நிலையில் ரூ 75 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அபிஷேக் வர்மன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இந்திப் படமான 2 ஸ்டேட்ஸ், பிரபல நாவலாசிரியர் சேத்தன் பகத்தின் 2 ஸ்டேட்ஸ் நாவலை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தில் நாயகனாக அர்ஜுன் கபூரும், நாயகியாக ஆலியா பட்டும் நடித்துள்ளனர்.
கடந்த 18ம் தேதி சுமார் இரண்டாயிரம் தியேட்டர்களில் ரிலீசானது 2 ஸ்டேட்ஸ் திரைப்படம். சேத்தன் பகத், ஆலியா முத்தம் என ரிலீசுக்கு முன்னரே படம் குறித்த பரபரப்பு எகிறியிருந்ததால் ரிலீசான அன்றே ரூ 12 கோடி வசூலை வாரிக் குவித்தது இப்படம்.
தற்போது வெற்றிகரமாக ரூ 75 கோடியைத் தாண்டி வசூலில் சாதனை படைத்துள்ளது '2 ஸ்டேட்ஸ்'.

எல்லை கடந்த காதல்...
தமிழ் மற்றும் பஞ்சாபி என இருவேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கிடையே உண்டாகும் காதலையும், அதற்கு உண்டாகும் எதிர்ப்பையும் விவரிக்கிறது இப்படம்.

தமிழிலும் வரவேற்பு...
தமிழ்நாட்டோடு தொடர்புடைய கதை என்பதால் சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டு பெரு நகரங்களிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

வசூலில் சாதனை...
தமிழ்நாட்டில் மட்டும் இப்பட வசூல் ரூ 2 கோடியைத் தாண்டியுள்ளது. மொத்தத்தில் தற்போதைய நிலவரப்படி, ரூ 75 கோடியைத் தாண்டி வசூலில் சாதனை புரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட்ஜெட்டைத் தாண்டிய வசூல்...
இப்படம் வெளியான ஒரு வாரத்தில் 40 கோடியை வசூலித்தது. இது படத்தின் தயாரிப்பு பட்ஜெட்டை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











