twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சோனா பாலியல் பலாத்கார வழக்கு: எஸ்.பி.பி.சரணுக்கு 2 வாரம் இடைக்கால முன்ஜாமீன்

    By Shankar
    |

    SPB Charan and Sona
    சென்னை: மது விருந்தின்போது நடிகை சோனாவை பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரணுக்கு இரு வார இடைக்கால முன்ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

    இந்த வழக்கை நீதிபதி ராஜசூர்யா விசாரித்தார். வழக்கு விசாரணை ஆரம்பகட்டத்தில் இருப்பதால், முன்ஜாமீன் அளிக்கக்கூடாது என்றும் அவர் சாட்சியை கலைத்துவிடக்கூடும் என்றும் அரசு வக்கீல் சி.பாலசுப்பிரமணியம் வாதிட்டார்.

    இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "சரணுக்கு 2 வாரத்துக்கு இடைக்கால முன்ஜாமீன் அளிக்கப்படுகிறது. வழக்கின் சாட்சிகளை கலைப்பதற்கு முயற்சிக்கக்கூடாது. மறுஉத்தரவு வரும்வரை தினமும் காலை 8 மணிக்கு பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி சரண் கையெழுத்திட வேண்டும்.

    ரூ.10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீன் தொகையும், அதே தொகைக்கான இருநபர் ஜாமீனும் அளித்து சரண் முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம்," என்றார்.

    முன்னதாக, எஸ்பிபி சரண் தன்னிடம் தவறாக நடந்ததற்கு வீடியோ ஆதாரம் இருப்பதாகக் கூறி அவற்றை போலீஸ் கமிஷனரிடம் ஒப்படைத்தார் சோனா.

    மேலும் இன்று (வெள்ளிக்கிழமைக்குள்) சரண் தன்னிடம் மன்னிப்புக் கேட்டால் வழக்கை வாபஸ் வாங்குவதாகவும் அவர் கூறியிருந்தார்.

    ஆனால் சரண் இதுவரை மன்னிப்புக் கேட்கவில்லை. இதற்கிடையே அவருக்கு முன்ஜாமீனும் கிடைத்துள்ளது.

    English summary
    SPB Charan has got an interim bail in Sona's sexual abuse case on Thursday in Madras High court.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X