twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காப்பீட்டு நிறுவனத்துக்கு எதிரான நடிகர் விஜயகுமார் வழக்கு தள்ளி வைப்பு!

    By Staff
    |

    Vijayakumar, Manjula and Family
    ரூ 25 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு யுனைடட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மீது நடிகர் விஜயகுமார் தொடர்ந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.

    நடிகர் விஜயகுமார் 1993-ம் ஆண்டு சினிமா சூட்டிங் தொடர்பாக சென்னையில் இருந்து கோவைக்கு காரில் பயணம் செய்தபோது, தர்மபுரி அருகே விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார்.

    "இந்த விபத்து ஏற்பட்டதால் தன்னால் சினிமா சூட்டிங் செல்ல முடியவில்லை, மருத்துவ சிகிச்சை செலவும் அதிகமாகிவிட்டது. எனவே ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்க யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று தர்மபுரி மாவட்ட வாகன விபத்து தீர்ப்பாயத்தில் விஜயகுமார் கோரினார்.

    இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் ரூ.19 லட்சத்தை நஷ்டஈடாக நடிகர் விஜயகுமாருக்கு கொடுக்க உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நடிகர் விஜயகுமாருக்கு எந்த அளவுக்கு இந்த விபத்தினால் உடலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது பற்றி அரசு மருத்துவமனையின் மருத்துவ குழு ஆராய்ந்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    இதைத் தொடர்ந்து, மருத்துவ அறிக்கை வரும் வரை வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X