இலங்கையில் அமிதாப்-ஐஸ்வர்யா ராய்

இந்திய சர்வதேச திரைப்பட நிறுவனத்தால் இலங்கையில் நடத்தப்படவுள்ள திரைப்பட விழா தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்வதற்காகவே அவர் இலங்கை வந்தார்.
இலங்கை சுற்றுலாச் சபையின் சார்பில் நடைபெறும் இந்த விழா வரும் வரும் ஜூன் 3, 4 மற்றும் 5ம் தேதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது.
இந்தத் திரைப்பட விழாவில் பிரபல ஹிந்தி திரைப்பட நட்சத்திரங்களான ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் போன்றவர்களும் பங்கேற்க உள்ளனர்.
இந்த விழா தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.
முன்னதாக பண்டாரநாயக்கா விமான நிலையம் வந்த அமிதாப் பச்சனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
More from Filmibeat
amitabh bachan அமிதாப் பச்சன் இலங்கைப் பயணம் திரைப்பட விழா பத்திரிகையாளர் சந்திப்பு film festival press meet reception srilanka


Click it and Unblock the Notifications











