சந்திரலேகா முதல் சந்திரமுகி வரை...

1931 முதல் 2009 வரை வெளிவந்த படங்கள், சிறந்த படங்கள்பெற்ற விருதுகள் என பல தகவல்களை சேகரித்து வைத்துள்ளார். இவரது தகவல்களின் உதவியுடன், சந்திரலேகா முதல் சந்திரமுகி வரை திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட பிரமாண்ட அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை விளக்கும் திரைப்படக் கண்காட்சி சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை தீவுத்திடலில் நேற்று தொடங்கி அக்டோபர் -11 வரை நடைபெறவுள்ள இந்த கண்காட்சிக்கு 'சந்திரலேகா முதல் சந்திரமுகி" வரை என பெயரிடப்பட்டுள்ளது. சந்திரலேகா படத்தில் இடம்பெற்ற டிரம்ஸ் அரங்கும், சந்திரமுகியில் இடம் பெற்ற அரண்மனை அரங்கும் இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள திரையரங்கில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி மற்றும் கமல் நடித்த புகழ் பெற்ற படங்களும் திரையிடப்படவுள்ளன.
Comments
கண்காட்சி சந்திரமுகி சந்திரலேகா பிலிம்நியூஸ் ஆனந்தன் chandralekha chandramukhi exhibition filmnews aandan kollywood


Click it and Unblock the Notifications